இலங்கை

உடுவில். பேருந்து தரிப்பிடத்தில் முதியவரின் சடலம் மீட்பு!

Published

on

உடுவில். பேருந்து தரிப்பிடத்தில் முதியவரின் சடலம் மீட்பு!

உடுவில் பொது நூலகத்துக்கு அருகாமையில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில்  இருந்து முதியவர் ஒருவரின்  சடலம் மீட்கப்பட்டது. மாவை கலட்டி, கொல்லங்கலட்டி, தெல்லிப்பழை என்ற முகவரியைச் சேர்ந்த 74வயதுடைய சின்னன் தங்கராசா  என்பவரே  இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

Advertisement

குறித்த முதியவர் அப்பகுதியில் கடந்த மூன்று வருடங்களாக ஆதரவில்லாமல் யாசகம் பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டார். சடலத்தை மீட்ட சுன்னாகம் பொலிஸார் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரது சடலம் மீதான இறப்பு  விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்.போதனா மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்பட்டது.
 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version