இலங்கை

கண்டி – யாழ்ப்பாணம் வீதி விபத்தில் யாழ் இளைஞன் உயிரிழப்பு

Published

on

கண்டி – யாழ்ப்பாணம் வீதி விபத்தில் யாழ் இளைஞன் உயிரிழப்பு

    கனகராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் பெரியகுளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர்உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

Advertisement

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற லொறியும், கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்துகொண்டிருந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது, விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதியும், பின்னால் அமர்ந்து பயணித்த இளைஞனும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் முச்சக்கர வண்டியின் பின்னால் அமர்ந்து பயணித்த இளைஞன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் – கரவெட்டி மேற்கு பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

Advertisement

சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கனகராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version