சினிமா

கனிகாவின் இந்த நிலைக்கு இதான் காரணம்!! பிரபல நடிகர் ஓபன் டாக்

Published

on

கனிகாவின் இந்த நிலைக்கு இதான் காரணம்!! பிரபல நடிகர் ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து டாப் நடிகையாக திகழ்ந்தவர் நடிகை தேவிகா. கவிஞர் கண்ணதாசனிடம் பாராட்டுக்களை பெற்ற அவரின் மகளாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை கனிகா.1989ல் கரகாட்டக்காரன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து டாப் நடிகையாகினார். தேவிகா, தன் கணவரை விவாகரத்து செய்து மகளுடன் தனியாக வசித்து வந்த நிலையில் 2002ல் தேவிகா மரணமடைந்தார்.அதன்பின் தந்தையுடன் பிரச்சனை, சொத்து தகராறு என தனிமையாக உணர்ந்த கனிகா, பல ஆண்டுகளாக வெளியில் வராமல் வீட்டிலேயே முடங்கினார். 2023ல் குட்டி பத்மினியை சந்தித்து வெளியில் தலைக்காட்டினார்.இந்நிலையில் கனிகாவின் இந்த நிலை குறித்து நடிகர் காமராஜன் பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.அதில், நடிகை கனகா தமது தாயாரின் மறைவுக்குப்பின் மிகவும் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் பழைய நினைவுகளைக்கூட அவர் மறந்துவிட்டதாகவும், உருக்கமான குரலில் காமராஜன் தெரிவித்துள்ளார்.சமீபத்தில் கனகாவை நேரில் சந்தித்து பேசியதை வைத்து தான் காமராஜன் இப்படி கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version