இலங்கை

கொழும்பு தனியார் ஆடம்பர விடுதியில் தீப்பரவல்

Published

on

கொழும்பு தனியார் ஆடம்பர விடுதியில் தீப்பரவல்

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டைப் பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் ஆடம்பர விடுதியில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டதால் விடுதி முழுவதும் புகைமண்டலமாகியுள்ளது.

நேற்றைய தினம் இரவு இந்த தீ விபத்து இடம்பெற்றது.

Advertisement

குறித்த விடுதியில் விருந்துபசார நிகழ்வு ஒன்று நடந்து கொண்டிருந்த போது திடீரென தீப்பரவல் ஏற்பட்டது.

தீப்பரவலால் விடுதியில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வு சிறிதுநேரம் புகைமண்டலமாகியது.

அதனையடுத்து கோட்டை மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்தன.

Advertisement

அதன்பின்னர் விடுதியில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்தின் போது எவருக்கும் எந்த வித ஆபத்துக்கள் இடம் பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

விடுதியில் அதுவும் விருந்துபசாரத்தின் போது தீப்பரவல் ஏற்பட்டதால் விடுதி முழுவதிலும் சற்றுநேரம் பதற்ற சூழல் உருவாகியது.

Advertisement

தீ விபத்து தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version