இலங்கை

தகனம் செய்யப்பட்டவர் உயிருடன் வந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி!

Published

on

தகனம் செய்யப்பட்டவர் உயிருடன் வந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி!

    இந்தியாவின் சத்தீஸ்கரில் இறந்துவிட்டதாக கருதி தகனம் செய்யப்பட்டவர் உயிருடன் வந்ததால் உறவைனர்கள் அதிர்ச்சியடைந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரிவருகையில்,

Advertisement

சத்தீஸ்கரில் நவம்பர் 1 ஆம் திகதி சூரஜ்பூர் மாவட்டத்தின் மன்பூர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து ஒரு உடலம் மீட்கப்பட்டது.

அருகில் உள்ள சந்தர்பூர் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான புருஷோத்தமனின் குடும்பத்தினர், இரண்டு நாட்களாக அவரை காணவில்லை என பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்த நிலையில், உறவினர்களுக்கு அந்த உடலம் காண்பிக்கப்பட்டது.

குடும்பத்தினர், இறந்தவர் புருஷோத்தமன் என அடையாளம் காட்டிய நிலையில் காவல்துறையினர் விபத்து மரணம் என வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் உடலத்தை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement

இதனையடுத்து குடும்பத்தினர் உடலத்தை அடக்கம் செய்து இறுதிச் சடங்கு செய்தனர். இந்நிலையில் புருஷோத்தமனின் இறப்பு செய்தியைக் கேள்விப்பட்டு அங்கு வந்த உறவினர்கள், புருஷோத்தமனை சந்தர்பூரில் இருந்து 45 கிலோமீற்றர் தொலைவில் உள்ள அம்பிகாபூரில் பார்த்ததாக குடும்பத்தினருக்குத் தெரிவித்தனர்.

இறுதியில் புருஷோத்தமன் அங்கு ஒரு உறவினரின் வீட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு நவம்பர் 4 ஆம் திகதி வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.

புருஷோத்தமனனின் குடும்பத்தினரால் அடக்கம் செய்யப்பட்ட நபரின் டி.என்.ஏ மாதிரிகள், கைரேகைகள், உடைகள் மற்றும் பிற உடைமைகள் பாதுகாக்கப்பட்டு உடலின் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவற்றை வைத்து உடலத்தை அடையாளம் காண பொலிஸார் விசாரணைகளி மேற்ஒண்டுள்ளதாக கூறப்படுகின்றது.    

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version