டி.வி
தாய் வீட்டு சீர் கொடுத்த பழனி… ஆனந்தக் கண்ணீரில் கோமதி.!
தாய் வீட்டு சீர் கொடுத்த பழனி… ஆனந்தக் கண்ணீரில் கோமதி.!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கோமதி ராஜியைப் பார்த்து நீ நினைச்சாலும் உங்க வீட்டில இருந்து சீர் வராது என்கிறார். அதைக் கேட்ட பாண்டியன் ஆறுதல் சொல்லாமல் ஏன் இப்புடி கதைக்கிற என்று கேட்க்கிறார். பின் கோமதி பழனியைப் பார்த்து நீ எப்பயாவது எனக்கு சீர் கொடுத்திருக்கியா என்று கேட்க்கிறார். அதனை அடுத்து பாண்டியன் அவள் அப்புடித் தான் எதையாவது பேசிட்டு இருப்பாள் நீ அதை எல்லாம் யோசிக்காத என்கிறார்.அதனை அடுத்து எல்லாரும் தீபாவளி பலகாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த நேரம் பார்த்து செந்தில் மீனாவுக்கு போன் எடுத்து எதுக்காக நம்ம வீட்டுப் போனீ என்று கேட்க்கிறார். பின் செந்தில் மீனா கிட்ட ரொமான்டிக்கா பேசுறார். அதை வீட்டில இருக்கிற எல்லாரும் கேட்டு சிரிக்கிறார்கள்.அதனை அடுத்து கதிர் செந்தில் வீட்டுக்குப் போய் நிற்கிறார்.அங்க போய் கதிர் வா அண்ணா நம்ம வீட்டுக்குப் போகலாம் என்கிறார்.அதுக்கு செந்தில் நான் அங்க வரல என்கிறார். பின் கதிர் செந்திலை கூட்டிக்கொண்டு வீட்ட போறார். அதனை அடுத்து வீட்டுக்கு வந்த செந்திலைப் பார்த்த கோமதி எங்களோட பண்டிகை கொண்டாடுறதுக்கு உனக்கு கசக்குதா என்று கேட்க்கிறார். அதைக் கேட்ட செந்தில் மீனாவை கோபமாக பார்க்கிறார்.மறுபக்கம் பழனி கோமதிக்கு சீர் கொண்டு வந்து கொடுக்கிறார். அதைப் பார்த்த கோமதி சந்தோசம் தாங்க முடியாமல் ஆனந்தக் கண்ணீர் விடுறார். மேலும் நீ சீர் செய்து கொடுத்த சந்தோசமே போதும் என்கிறார் கோமதி. இதுதான் இன்றைய எபிசொட்.