வணிகம்
தினமும் ₹2,300 கோடி சம்பளம்! உலகிலேயே முதல் ட்ரில்லியனரா எலான் மஸ்க்? 5 முக்கிய நிபந்தனைகள் என்னென்ன?
தினமும் ₹2,300 கோடி சம்பளம்! உலகிலேயே முதல் ட்ரில்லியனரா எலான் மஸ்க்? 5 முக்கிய நிபந்தனைகள் என்னென்ன?
எலான் மஸ்க் (Elon Musk) ஒரு வருடத்திற்குச் சம்பளமே வாங்க மறுப்பவர் என்பது நாம் அறிந்ததே. ஆனால், அவருக்கு டெஸ்லா (Tesla) நிறுவனம் வழங்க ஒப்புதல் அளித்துள்ள சமீபத்திய ஊதியத் திட்டம், வரலாற்றிலேயே மிகப்பெரியது! ஆம், டெஸ்லா பங்குதாரர்கள் நேற்று (வியாழக்கிழமை) தலைமைச் செயல் அதிகாரி மஸ்கின் $1 ட்ரில்லியன் (ஒரு லட்சம் கோடி டாலர்) ஊதியத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முன்மொழிவுக்குச் 75% க்கும் அதிகமான பங்குதாரர்கள் வாக்களித்துள்ளனர். இந்தச் சலுகை நிராகரிக்கப்பட்டால், மஸ்க் நிறுவனத்தை விட்டு வெளியேறக்கூடும் என்ற கவலையை இந்த ஒப்புதல் இப்போது தணித்துள்ளது.சம்பளமல்ல, இது சவால்! இந்த $1 ட்ரில்லியன் ஊதியத் திட்டம் என்பது ரொக்கமாக வழங்கப்படுவதல்ல. இது ஒரு பெரிய பங்கு மானியமாக (Massive Stock Grant) கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் முழு மதிப்பையும் மஸ்க் அடைய வேண்டுமென்றால், டெஸ்லா நிறுவனம் விண்வெளியைத் தொடும் அளவுக்குச் சில சவால்களைச் சந்திக்க வேண்டும்.முக்கிய நிபந்தனை:இந்த $1 ட்ரில்லியன் மதிப்பைப் பெறுவதற்கு, டெஸ்லாவின் சந்தை மூலதனம் (Market Capitalisation) தற்போதைய $1.5 ட்ரில்லியன் மதிப்பில் இருந்து, $8.5 ட்ரில்லியன் என்ற வியத்தகு இலக்கை அடைய வேண்டும். இந்த இலக்கை எட்டுவதற்கு, டெஸ்லா பங்குகளின் மதிப்பு, இன்றைய நிலையில் இருந்து 460% அதிகமாக உயர்ந்தாக வேண்டும்!கடந்த வாரம் $5 ட்ரில்லியன் சந்தை மதிப்பைத் தொட்டு உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக உருவெடுத்த Nvidia-வை விட டெஸ்லா சுமார் 70% அதிகமாக மதிப்பிடப்பட வேண்டும்!தினமும் ₹2,300 கோடி சம்பளமா? நிபந்தனைகள் என்னென்ன?இந்த $1 ட்ரில்லியன் மானியத்தைப் பெற, டெஸ்லா நிறுவனம் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் (Next Decade) சில முக்கிய செயல்பாட்டு மற்றும் நிதி இலக்குகளைக் கடந்தாக வேண்டும். ஒவ்வொரு இலக்கையும் மஸ்க் நிறைவேற்றும்போதுதான், இந்த ஊதியமானது 12 சம தவணைகளாக விடுவிக்கப்படும்.அடேங்கப்பா! இந்த 10 ஆண்டு காலப்பகுதியில் அனைத்துத் தவணைகளையும் மஸ்க் வெற்றிகரமாக அடைந்தால், அவரது தினசரி சராசரி வருமானம் சுமார் $275 மில்லியன் (இந்திய மதிப்பில் தோராயமாக ₹2,300 கோடி) ஆக இருக்கும்!மஸ்க் நிறைவேற்ற வேண்டிய 5 முக்கிய இலக்குகள்:டெஸ்லாவின் சந்தை மூலதனத்தை $1.5 ட்ரில்லியனில் இருந்து $8.5 ட்ரில்லியனாக உயர்த்த வேண்டும்.1 மில்லியன் (10 லட்சம்) ரோபோடாக்சிகளை (Robotaxis) அறிமுகப்படுத்த வேண்டும்.கூடுதலாக 12 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்ய வேண்டும்.10 மில்லியன் ஃபுல் செல்ஃப் டிரைவிங் (Full Self-Driving – FSD) சந்தாக்களைப் பெற வேண்டும்.1 மில்லியன் ஹியூமனாய்டு ரோபோக்களை (Humanoid Robots) விற்பனை செய்ய வேண்டும்.எலான் மஸ்கின் உற்சாக உரைஆஸ்டினில் உள்ள பங்குதாரர்களிடையே பேசிய மஸ்க், இந்த ஒப்புதலை நிறுவனத்தின் ஒரு திருப்புமுனை தருணமாகக் குறிப்பிட்டார். “நாம் தொடங்கவிருப்பது டெஸ்லாவின் எதிர்காலத்தின் ஒரு புதிய அத்தியாயம் மட்டுமல்ல, இது ஒரு முழு புதிய புத்தகம்,” என்று அவர் உற்சாகமாகத் தெரிவித்தார்.எதிர்ப்புக் குரல்கள்இந்த மாபெரும் ஊதியத் திட்டத்திற்கு ஒருபுறம் ஒப்புதல் கிடைத்தாலும், கணிசமான எதிர்ப்பும் கிளம்பியது. நார்வேயின் இறையாண்மை செல்வ நிதியத்தை (Norway’s sovereign wealth fund) நிர்வகிக்கும் நார்ஜஸ் பேங்க் இன்வெஸ்ட்மெண்ட் மேனேஜ்மெண்ட் (Norges Bank Investment Management) மற்றும் முக்கிய ஆலோசனை நிறுவனங்களான (ISS, Glass Lewis) ஆகியவை இந்த ஊதியத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தன.உலகப் பணக்காரரான எலான் மஸ்க், இந்தச் சவாலான இலக்குகளை வெற்றிகொண்டு, உலகின் முதல் ட்ரில்லியனர் என்ற வரலாற்றைப் படைப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்!