பொழுதுபோக்கு

நடிப்பு அரக்கன் டா… மரண பயத்தை காட்டிய திவாகர்; பதறிப்போன பாடகர் மனோ

Published

on

நடிப்பு அரக்கன் டா… மரண பயத்தை காட்டிய திவாகர்; பதறிப்போன பாடகர் மனோ

பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கி 30 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. எப்போதும் இல்லாமல் இந்த சீசனில் சமூக வலைதளப் பிரபலங்கள் பலர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். பிக்பாஸ் வீடு என்றாலே பிரச்சனைகள் நிறைந்ததாக தான் இருக்கும், ஆனால் சீசன் 9 நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் பிரச்சனையா? அல்லது பிரச்சனையில் பிக்பாஸ் வீடா? என்று அறியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். பொழுது போக்கிற்காக பிக்பாஸ் பார்த்து வந்த மக்கள் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தால் மன அமைதி கெட்டுவிடும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.அதாவது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக பிக்பாஸ் வீட்டில் பிரச்சனைகள் அரங்கேறி வருகிறது. பிரச்சனைகளை உருவாக்குவதற்கு மூலக்காரணமாக இருப்பதே வி.ஜே.பார்வதியும் திவாகரும் தான் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இவர்கள் இருவர் இல்லாமல் ப்ரோமோ கூட வருவதில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாங்கள் தான் வெளியில் தெரிய வேண்டும் என்று பார்வதியும் திவாகரும் பல வேலைகளை செய்து வருகின்றனர்.சரி சாதாரண நேரம் தான் சண்டை போடுகிறீர்கள் டாஸ்க் கொடுத்தாலாவது ஒன்று சேர்ந்து செய்வார்கள் என்று பார்த்தால் அதுவும் இல்லை. சமீபத்தில் ஹோட்டல் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் விருந்தாளிகளாக வந்த தீபக், பிரியங்கா, மஞ்சரி ஆகிய மூன்று பேரும் போட்டியாளர்களை வாங்கு… வாங்கு என்று வாங்கினர். தீபக் அழுதேவிட்டார். இப்படி பிக்பாஸ் வீட்டில் பிரச்சனைகள் மட்டுமே தினமும் மேலோங்கி வருகிறது. ஒன்றாக சேர்ந்து விளையாடுவோம் ஆடியன்ஸை உற்சாகப்படுத்துவோம் என்ற எண்ணத்தில் யாருமே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்று சினிமா வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.That monkey won’t leave you alone, will it? 🍉🐒🙈I burst out laughing as soon as I saw Mano sir’s facial expressions😂😂Dharpees has shown you the fear of death.#BiggBossTamil9pic.twitter.com/DpzqX29aNVஇந்நிலையில், பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், பாடகர் மனோ தன் படத்தின் ப்ரொமோஷனுக்காக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார். அப்போது நடிப்பு அரக்கன் என்று தன்னை தானே சொல்லிக் கொள்ளும் திவாகர், ’கர்ணன்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ பாடலுக்கு நான் நன்றாக ரியாக்‌ஷன் கொடுப்பேன் என்கிறார். இதையடுத்து கானா வினோத் அந்த பாடலை பாட பாடகர் மனோ இசையமைக்கிறார். இந்த பாடலுக்கு திவாகர் கொடுக்கும் ரியாக்‌ஷனை பார்த்த மனோ, இதுதான் நடிப்பா என்று திவாகரை பார்க்கிறார். திவாகர் தன் பெர்ஃபாமென்ஸை முடித்ததும். நன்றாக செய்தீர்கள் என்று பாராட்டுகிறார். இதனுடன் இந்த வீடியோ முடிவடைகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version