இலங்கை

நிதி நிலைமை தொடர்பில் எவரும் இனி கனவு காண கூடாது; ஜனாதிபதி அனுர

Published

on

நிதி நிலைமை தொடர்பில் எவரும் இனி கனவு காண கூடாது; ஜனாதிபதி அனுர

  நிதி நிலைமை மீண்டும் பலவீனமடையும் என்று எவரும் இனி கனவு காண கூடாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாடாளும்ன்றில் இன்று தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டு நிதியாண்டுக்குரிய வரவு – செலவுத் திட்டத்தை இன்று வெள்ளிக்கிழமை (07) நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சபைக்கு சமர்ப்பித்தார்.

Advertisement

இதன்போது ஜனாதிபதி உரையாற்றுகையில்,

பொருளாதார மீட்சிக்கு எடுத்த சிறந்த தீர்மானங்களால் பெருமைக்கொள்கிறோம். பேரண்ட பொருளாதாரத்தை வளர்ச்சி பெற செய்யவும்,நிதி ஒழுக்கத்தை நிலைப்படுத்தவும் கடுமையான எடுத்துள்ளோம்.

பணவீக்கத்தை 5 சதவீதத்துக்கு குறைவான மட்டத்தில் பேணுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.நிதி நிலைமை மீண்டும் பலவீனமடையும் என்று எவரும் இனி கனவு காண கூடாது எனத் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version