இலங்கை

பருத்தித்துறையில் வெள்ளத்தில் மிதந்த மரக்கறி சந்தை!

Published

on

பருத்தித்துறையில் வெள்ளத்தில் மிதந்த மரக்கறி சந்தை!

யாழ். பருத்தித்துறை பகுதியில்  மரக்கறி சந்தை வெள்ளத்தில் மிதந்துள்ளது. 

இதையடுத்து கழிவகற்றல் வாகனத்தின் மூலம் நகரசபை தரப்பில் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டது. நகரசபை தவிசாளர் வின்சென் டீ போல் டக்ளஸ் போல் சந்தையை பார்வையிட்டார்.

Advertisement

இதன்போது வியாபாரிகள் தவிசாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட காலமாக இருக்கும் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமை தொடர்பில் தவிசாளரிடம் முறைப்பாடுகளைத்  தெரிவித்தனர். தொடர்ந்து மழை நீடிக்கும் பட்சத்தில் மரக்கறி சந்தை வியாபாரிகளின் கோரிக்கைக்கு அமைவாக நவீன சந்தை கட்டடத்திற்கு கொண்டு செல்வது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுப்பதாக வியாபாரிகளிடம் தவிசாளர் உறுதிபடத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version