டி.வி

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் கெமி… காரணம் என்ன தெரியுமா.?

Published

on

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் கெமி… காரணம் என்ன தெரியுமா.?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 9, இன்று தனது 33வது நாளில் காலடி வைத்துள்ளது. எப்போதும் போல சில நேரங்களில் சீராகவும் சில நேரங்களில் சண்டைகளாலும் கலகலப்பாகவும் சென்று கொண்டிருக்கும் இந்த ரியாலிட்டி ஷோ, தற்போது வைல்ட் கார்ட் என்ட்ரிகள் காரணமாக மறுபடியும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.ஆனால் இந்த உற்சாகத்தின் நடுவே, ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.  பங்கேற்பாளர் கெமி, மருத்துவ காரணங்களால் பிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. பிக்பாஸ் வீட்டில் ஈரத்தன்மை அதிகமாக இருந்ததால் கெமியின் தோலில் அலர்ஜி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவ அணியின் ஆலோசனையின் பேரில் பிக்பாஸ் குழு உடனடியாக அவரை வீட்டிலிருந்து வெளியேற்றியது என தகவல்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பாக இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ள போட்டியாளர்கள் மற்றும் வெளியே உள்ள ரசிகர்கள் மத்தியில் இந்த செய்தி வைரலாகி வருகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version