பொழுதுபோக்கு

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கெமி… காரணம் என்ன தெரியுமா?

Published

on

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கெமி… காரணம் என்ன தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தொடர்ந்து ட்ரோல்களை சந்தித்து வருகிறது. மக்கள் பொழுது போக்கிற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்த நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களின் மன அமைதியை சீர்குலைத்து வருவதாக கூறப்படுகிறது. சீசன் 9 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் தேர்வில் பிக்பாஸ் நிகழ்ச்சியினர் தவறு செய்துவிட்டதாகவும் கருத்து மேலெழுந்து உள்ளது.என்ன செய்தாலும் நாங்கள் இப்படி தான் இருப்போம் என்று பார்வதியும் திவாகரும் நடந்து வருகின்றனர். பார்வதி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அமைதியாக இருக்கிறார். அதன்பிறகு தன் வேலையை காண்பித்து வருகிறார். முதலில் கன்டன்ட் கொடுப்பதற்காக இப்படி செய்து வந்தார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டிலேயே தான் பெரிய ஆளாக தெரிய வேண்டும் என்பதற்காக இப்படி எல்லாம் செய்து வருவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.அதுமட்டுமல்லாமல், திவாகரும் என்ன நடந்தாலும் நான் என் பெருமையை தான் பேசுவேன் என தற்பொருமை பேசிக் கொண்டு சுற்றுகிறார். ஹோட்டல் டாஸ்கில் சாண்ட்ரா தன் உழைப்பை எல்லாம் கொட்டி வேலை செய்தால் வியானாவும் திவாகரும் அதை தான் செய்ததாக பெருமை தேட முயற்சிக்கின்றனர். பார்வதி – திவாகர் எல்லாத்தையும் இன்னும் ஏன் வீட்டில் வைத்திருக்கிறீர்கள் வெளியே அனுப்புங்கள் என்ற கருத்துகளும் மேலோங்கி வருகிறது.இவர்களை வைத்துக் கொண்டு என்னதான் செய்வது என்று பிக்பாஸிற்கே தெரியவில்லை. ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டால் எல்லோரும் தான் மட்டும் வெளியில் தெரிய வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர குழுவாக சேர்ந்து விளையாட மறுக்கின்றனர். இதுவே பார்வையாளர்களை கடுப்பேற்றி வருகிறது. ஹோட்டல் டாஸ்கில் பிக்பாஸ் வீட்டிற்கு விருந்தாளிகளாக வந்த தீபக், பிரியங்கா, மஞ்சரி ஆகியோர் நீங்க ஏன் இப்படி இருக்கீங்க என்று தங்களது ஆதங்கத்தை கொட்டினார்கள். தீபக் கண்ணீர் விட்டு அழவே செய்துவிட்டார். இப்படி என்ன செய்தாலும் நாங்கள் இப்படி தான் இருப்போம் என்ற மன நிலைக்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் உள்ளனர்.இந்நிலையில், பிக்பாஸ் போட்டியாளரான கெமி, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. அதாவது, ஈரப்பதம் காரணமாக தோல் உரிந்து வந்ததால் போட்டியாளர் கெமி, மருத்துவ சிகிச்சைக்காக வெளியே அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version