இலங்கை

போதை பொருளால் பணிநீக்கம் செய்யப்பட்ட பாடசாலை அதிபர்

Published

on

போதை பொருளால் பணிநீக்கம் செய்யப்பட்ட பாடசாலை அதிபர்

  அனுராதபுரத்தில் ஹெரோயின் போதைப்பொருள் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை பணி நீக்கம் செய்வதற்கு வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தீர்மானித்துள்ளார்.

வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர், அனுராதபுரம் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களைக் கவனத்தில் கொண்டு, ஸ்தாபனக் கோவையின் சரத்துக்களின் கீழ் வரும் குற்றத்தை அவர் செய்துள்ளதால், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

Advertisement

தேசிய மக்கள் சக்தியின் நகர சபை உறுப்பினர் ஒருவரின் கணவரான குறித்த அதிபர், அண்மையில் 1 கிலோ 118 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

 அநுராதபுரம் பகுதியில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரின் மனைவி, தேசிய மக்கள் சக்தியின் பேலியகொடை நகர சபை உறுப்பினர் திஸ்னா நிரஞ்சலாவும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version