இந்தியா
முகப்பொலிவின் ரகசியம்: உலகக் கோப்பை வென்ற வீராங்கனைகளுடன் கலகலப்பாக உரையாடிய மோடி!
முகப்பொலிவின் ரகசியம்: உலகக் கோப்பை வென்ற வீராங்கனைகளுடன் கலகலப்பாக உரையாடிய மோடி!
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனைகள், பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்தச் சந்திப்பின்போது கோப்பையை வென்ற ரகசியங்களை ஆர்வமுடன் பிரதமர் மோடி கேட்டறிந்தார், அப்போது ஹர்லின் தியோல், எப்போதும் முகப்பொலிவுடன் இருக்கிறீர்களே எப்படி என்று கேட்டதற்கு, பிரதமர் மோடி தனது முகப்பொலிவின் ரகசியத்தை பகிர்ந்துகொண்டதால் உரையாடல் கலகலப்பாக இருந்தது.அண்மையில் நவிமும்பையில் நடந்த பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிப் புதிய வரலாறு படைத்தது. இந்த வெற்றியின் நாயகிகளான இந்திய வீராங்கனைகள் புதன்கிழமை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.இந்த சந்திப்பின் போது, கோப்பையைப் பிரதமரிடம் கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்ட வீராங்கனைகளுடன், பிரதமர் மோடி உற்சாகமாகக் கலந்துரையாடி, போட்டி தொடர்பான பரபரப்பான தருணங்களை ஆர்வமுடன் கேட்டறிந்தார். மேலும், வீராங்கனைகளுக்குத் தன் கைப்பட லட்டு வழங்கி மகிழ்வித்தார்.வீராங்கனைகளின் கேள்வியும் பிரதமரின் நகைச்சுவை பதிலும்:இந்தச் சந்திப்பின் போது, இந்திய வீராங்கனை ஹர்லீன் தியோல், பிரதமரிடம் ஒரு சுவாரசியமான கேள்வியை எழுப்பினார். “எப்போதும் முகப்பொலிவோடு இருக்கிறீர்களே காரணம் என்ன?” என அவர் கேட்டபோது, பிரதமர் மோடி உடனடியாக நகைச்சுவையாகப் பதிலளித்தார்.Every Indian feels immense pride in Team India’s World Cup victory. It was a delight interacting with the women’s cricket team. Do watch! https://t.co/PkkfKFBNbb“உடனே பிரதமர் மோடி 25 ஆண்டுகாலமாக அரசை நிர்வகிப்பதும்; இந்த மக்களின் ஆசீர்வாதமுமே காரணம். நான் அதுபற்றியெல்லாம் சிந்திப்பதே இல்லை.. (சிரிக்கிறார்)” என்று பதிலளித்தார்.பிரதமரின் இந்தப் பதிலைக் கேட்டு இந்திய வீராங்கனைகளிடையே சிரிப்பலை எழுந்தது. அப்போது, ஆல் ரவுண்டர் ஸ்நேகா ரானா, “நாட்டு மக்களின் அன்பினால் தான் பிரதமரின் முகம் பொலிவுடன் இருக்கிறது” என்று கூறினார். இதைக் கேட்ட பிரதமர் மோடி, “நிச்சயமாக, என்னுடைய வலிமைக்கான காரணமே நாட்டு மக்கள் தான். அதன் விளைவு தான் இவை எல்லாம்” எனக் கூறி மக்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.வெற்றிக் கோப்பையை வென்ற ரகசியம்:உலகக்கோப்பையை வென்ற ரகசியம் குறித்துப் பிரதமர் மோடி கேட்டபோது, இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் உணர்ச்சிபொங்கப் பதிலளித்தார்.ஹர்மன்பிரீத் கவுர்: “கடைசியாக 2017ல் உங்களை சந்தித்தோம், அப்போது கோப்பையை வெல்ல முடியவில்லை. ஆனால் இந்த முறை நாங்கள் உலக சாம்பியன்கள் என்பதில் மகிழ்ச்சியடைகிறோம். உங்களை சந்தித்தது பெருமையளிக்கிறது. எதிர்காலத்திலும் இதே மாதிரியான சூழலில் உங்களைச் சந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று இலக்காக நிர்ணயிக்கிறோம்,” என்றார்.தொடர்ந்து, தொடர் நாயகி விருதை வென்ற தீப்தி சர்மாவிடம், “நீங்கள் கடவுள் அனுமன் டாட்டூ போட்டுள்ளீர்களே, அது எவ்வாறு உங்களுக்கு உதவியது?” என்று பிரதமர் கேள்வி எழுப்பினார்.தீப்தி சர்மா: “என்னை விட கடவுள் அனுமன் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளேன். அதுவே என்னுடைய விளையாட்டை மேம்படுத்த அதிகமாக உதவியது,” எனக் கூறினார்.வீராங்கனைகளுக்கு மத்தியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியக் கிரிக்கெட்டின் முக்கியத்துவத்தை அழுத்தமாகப் பதிவு செய்தார்.பிரதமர் மோடி: “நீங்கள் ஒரு மிகப்பெரிய காரியத்தை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளீர்கள். இந்தியாவில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டுமில்லை. அது மக்களின் வாழ்க்கையாக மாறியுள்ளது. கிரிக்கெட்டில் இந்திய அணி வெற்றி பெற்றால் நாடே மகிழ்ச்சியாக இருக்கிறது. கிரிக்கெட்டில் தோல்வியடைந்தால், நாடே சோகத்தில் மூழ்கி விடுகிறது,” எனக் கூறினார்.சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாறு படைத்த இந்திய வீராங்கனைகளுக்குப் பிரதமரின் வாழ்த்தும், கலகலப்பான உரையாடலும் ஒரு மறக்க முடியாத தருணமாக அமைந்தது என்பதில் சந்தேகமில்லை.