பொழுதுபோக்கு

முடிவே பண்ணியாச்சு: விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா-வுக்கு டும்.. டும்.. டும்.. நடக்கப்போகும் இடம் இதுதான்

Published

on

முடிவே பண்ணியாச்சு: விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா-வுக்கு டும்.. டும்.. டும்.. நடக்கப்போகும் இடம் இதுதான்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா. இவர் தெலுங்கு, தமிழ், இந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழ் திரையுலகின் டாப் நடிகரான விஜய் முதல் இந்தி திரையுலகின் டாப் நடிகரான ரன்பீர் கபூர் வரை அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். வேல்ட் க்ரஸ் என அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகாவுக்கு இந்தி திரையுலகில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றனர். இப்படி பல படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா உடனான காதல் கிசுகிசுக்களிலும் அடிக்கடி சிக்கி வந்தார். இவர்கள் இருவரும் சில ஆண்டுகளாக டேட்டிங் செய்து வந்தனர்.  சமீபத்தில் இருவருக்கும் இடையே நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், இரு வீட்டாரும் ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமண ஏற்பாட்டில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்களாம். இவர்கள் இருவரின் திருமணம் 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி 26-ஆம் தேதி ராஜஸ்தானின் உதய்ப்பூர் அரண்மனையில் வைத்து நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. நடிகை ராஷ்மிகா  ‘காந்தாரா’ புகழ் ரிஷப் ஷெட்டி இயக்கிய ‘கிரிக் பார்ட்டி’  திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். இதையடுத்து ரிஷப் ஷெட்டிக்கும் ராஷ்மிகாவுக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில் இருவரும் படப்பிடிப்பின் போது டேட்டிங் செய்ய ஆரம்பித்தனர். கடந்த 2017-ஆம் ஆண்டு ஒரு பிரம்மாண்டமான விழாவில் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். அந்த வீடியோக்கள் இன்றும் யூடியூபில் இருக்கிறது. அந்த நேரத்தில், ரஷ்மிகாவுக்குச் சினிமாவில் நீண்ட கால வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்ற எண்ணம் எதுவும் இருக்கவில்லை. இருப்பினும், ‘கிரிக் பார்ட்டியில் அவரது நடிப்பு விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற பிறகு, நிலைமை மாறத் தொடங்கியது. ரஷ்மிகா பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இதில், விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த தெலுங்கு பிளாக்பஸ்டர் படமான ‘கீதா கோவிந்தம்’ படமும் அடங்கும். ஆனால் ரஷ்மிகா தொடர்ந்து நடிப்பதில், ரக்ஷித் ஷெட்டியின் குடும்பத்திற்கு அசௌகரியம் இருந்ததாகவும், இது இரு குடும்பங்களுக்கும் இடையே கருத்து வேறுபாட்டிற்கு வழிவகுத்தது என்றும் செய்திகள் பரவின. இறுதியில், தங்கள் நீண்ட கால லட்சியங்களும், எதிர்காலத்திற்கான பார்வையும் ஒத்துப் போகவில்லை என்பதை அத்தம்பதியினர் உணர்ந்தனர். ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் வெளியான ஒரு மாதத்திற்குப் பிறகு, அதாவது ஆகஸ்ட் 2018-ல் அவர்கள் தங்கள் நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version