இலங்கை

யாழில் இளம் குடும்ப பெண் படுகொலை ; சந்தேக நபர் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

Published

on

யாழில் இளம் குடும்ப பெண் படுகொலை ; சந்தேக நபர் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல என இலங்கை இசை வேளாளர் இளைஞர் பேரவை தெரிவித்துள்ளது.

குப்பிளான் பகுதியை சேர்ந்த தவில் வித்துவானை கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர் என ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியிருந்தது.

Advertisement

இது தொடர்பில் இலங்கை இசை வேளாளர் இளைஞர் பேரவை வெளியிட்ட அறிக்கையில் அதனை மறுத்துள்ளது.

குறித்த நபர் ஏற்கனவே பல திருட்டு சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டு பல வருடங்களாக தலைமறைவாக வாழ்ந்து வந்தவர்.

முதலில் அவர் ஒரு தவில் வித்துவான் அல்ல என்பதை அறியத்தருகின்றோம்.

Advertisement

எனவே அவர் தொடர்பான செய்திகளை வெளியிடுகையில் தவில் வித்துவான் என்பதை குறிப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என தாழ்மையாக வேண்டுகோள் விடுக்கின்றோம் என்றுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version