இலங்கை
யாழில் கைதான தென்னிலங்கையர் ; இரகசிய தகவலால் சிக்கிய நபர்
யாழில் கைதான தென்னிலங்கையர் ; இரகசிய தகவலால் சிக்கிய நபர்
கொழும்பு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்று (6) யாழ்ப்பாணம் அரசடி பகுதியில் வைத்து ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 2 கிராம் 250 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் போதை தடுப்பு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முனெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் விசாரணை மேற்கொண்ட பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.