வணிகம்

வாழ்நாள் முழுக்க மாதம் ரூ.24000 கிடைக்கும்; பி.பி.எஃப் திட்டத்தில் இவ்வளவு முதலீடு செய்தால் போதும்!

Published

on

வாழ்நாள் முழுக்க மாதம் ரூ.24000 கிடைக்கும்; பி.பி.எஃப் திட்டத்தில் இவ்வளவு முதலீடு செய்தால் போதும்!

பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது வெறும் வரி சேமிப்புத் திட்டம் என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், ஒரு சரியான உத்தியைக் கையாண்டால், இந்த அரசு ஆதரவு பெற்ற திட்டத்தை வாழ்நாள் முழுவதும் மாதாந்திர வருமானம் தரும் ஒரு அற்புதமான ஓய்வூதியத் திட்டமாக மாற்ற முடியும்.சந்தை அபாயம் துளியும் இல்லாத, உறுதியான வளர்ச்சியினை உறுதி செய்யும் இத்திட்டத்தில், செய்யப்படும் முதலீடு (ஆண்டுக்கு ₹1.5 லட்சம் வரை), ஈட்டும் வட்டி, மற்றும் முதிர்வுத் தொகை என அனைத்துக்கும் வரி விலக்கு அளிக்கப்படுவது இதன் மிகப்பெரிய சிறப்பம்சமாகும்.மாத வருமானமாக மாற்றுவது எப்படி? இதுதான் சீக்ரெட்!பி.பி.எஃப் (PPF) திட்டத்தின் அடிப்படைக் கால அளவு 15 ஆண்டுகள். இந்த முதிர்வு காலத்திற்குப் பிறகுதான் சூட்சுமமே தொடங்குகிறது!முதிர்வடைந்த பிறகு, நீங்கள் முதலீட்டைத் தொடராமல், 5 ஆண்டு தொகுதிகளாக (blocks) திட்டத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் நீட்டிக்கலாம்.வருமான வாய்ப்பு: தற்போதுள்ள 7.1% வட்டி விகிதத்தில், முதிர்வுத் தொகையை எடுக்காமல் நீட்டிக்கும் போது கிடைக்கும் வட்டியை மட்டும் மாதந்தோறும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். இதுவே உங்களுக்கு பாதுகாப்பான மாதாந்திர ஓய்வூதியமாகச் செயல்படும்.எவ்வளவு முதலீடு? எவ்வளவு மாத வருமானம்?மாதந்தோறும் ₹5,000, ₹10,000 அல்லது ₹12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் சேமிப்பு எவ்வளவு பெரிய பெருந்தொகையாக மாறும், மற்றும் அது எவ்வளவு மாத வருமானம் ஈட்டித் தரும் என்பதை இங்கே பார்க்கலாம் (வட்டி விகிதம் 7.1% எனக் கருதி):கவனிக்க வேண்டியவை:பி.பி.எஃப் (PPF) கணக்கைத் தொடங்க, நீங்கள் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். அஞ்சலகம் அல்லது வங்கிக் கிளையில் கணக்கைத் தொடங்கலாம். ஆதார் அட்டை, பான் அட்டை போன்ற KYC ஆவணங்கள், முகவரிச் சான்று மற்றும் புகைப்படம் ஆகியவை தேவை.நீண்ட கால முதலீட்டுப் பாதுகாப்பு மற்றும் ஓய்வுக்குப் பிந்தைய நிரந்தர வருமானம் தேடுபவர்களுக்கு, பொது வருங்கால வைப்பு நிதி ஒரு சிறந்த வழி என்று நிதி ஆலோசகர்கள் பரிந்துரைக்கின்றனர்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்!

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version