இலங்கை
வெள்ளத்தில் மிதந்த பருத்தித்துறை மரக்கறி சந்தை ; தவிசாளருடன் முறுகல்
வெள்ளத்தில் மிதந்த பருத்தித்துறை மரக்கறி சந்தை ; தவிசாளருடன் முறுகல்
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை மரக்கறி சந்தை வெள்ளத்தில் மிதந்த நிலையில் கழிவகற்றல் வாகனத்தின் மூலம் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டது.
இநிலையில் நகரசபை தவிசாளர் வின்சென் டீ போல் டக்ளஸ் போல் சந்தையை பார்வையிட வந்த போது வர்த்தகர்கள் தவிசாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதோடு இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமை தொடர்பில் தவிசாளரிடம் வியாபாரிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
தொடர்ந்து மழை நீடிக்கும் பட்சத்தில் மரக்கறி சந்தை வியாபாரிகளின் கோரிக்கைக்கு அமைவாக நவீன சந்தை கட்டடத்திற்கு கொண்டு செல்வது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுப்பதாக வியாபாரிகளிடம் தவிசாளர் உறுதி வழங்கினார்.