பொழுதுபோக்கு
Happy Birthday Kamalhaasan: களத்தூர் கண்ணம்மா முதல் தக் லைஃப் வரை – உலக நாயகனின் அவதாரம்; முழு விவரம் இதோ
Happy Birthday Kamalhaasan: களத்தூர் கண்ணம்மா முதல் தக் லைஃப் வரை – உலக நாயகனின் அவதாரம்; முழு விவரம் இதோ
நடிகர் கமல்ஹாசன் திரைத்துறையில் நடிகரையும் தாண்டி பல சாதனைகளை படைத்துள்ளார். இவர் உலக நாயகன் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். இந்த உலக நாயகன் பெயருக்கு நியாயம் சேர்க்கும் வகையில் தன் இத்தனை வருட திரைத்துறையில் வாழ்க்கையில் நடிகர் கமல்ஹாசன் கால் பதிக்காத இடங்களே இல்லை. ஒரு கதாபாத்திரத்தை எவ்வளவு வித்தியாசமாக கொடுத்து ரசிகர்களை கவர முடியுமோ அவ்வளவு வித்தியாசமாக கொடுப்பவர். தன் படத்தில் அரசியல் ரீதியான கருத்துக்களை ஆணித்தரமாக பதிவு செய்வார். பத்மபூஷன் மற்றும் பல தேசிய விருதுகளை வென்ற பெருமைக்கு சொந்தக்காரரான நடிகர் கமல்ஹாசன் நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர் என பல துறைகளில் சிறந்து விளங்கி வருகிறார். அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.தயாரிப்பாளர்1981-ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘ராஜ பார்வை’ திரைப்படத்தை ’ஹாசன் பிரதர்ஸ்’ தயாரிப்பு நிறுவனம் மூலம் கமல்ஹாசன் தயாரித்தார். இப்படம் கமல்ஹாசனின் 100-வது படமும் கூட. ‘ஹாசன் பிரதர்ஸ்’ தயாரிப்பு நிறுவனம் பின்னாளில் ‘ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த தயாரிப்பு நிறுவனம் விருமாண்டி, தேவர்மகன், ஹேய் ராம் போன்ற பல படங்களை தயாரித்துள்ளது. சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘தக் லைஃப்’ திரைப்படத்தையும் இந்நிறுவனம் தயாரித்திருந்தது.இயக்குநர்1996-ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான ‘அவ்வை சண்முகி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து, இப்படத்தை 1997-ஆம் ஆண்டு ‘சாச்சி 420’ என இந்தியில் கமல்ஹாசன் இயக்கி நடித்தார். இப்படம் தான் கமல்ஹாசன் இயக்கத்தில் வெளியான முதல் படம். இதையடுத்து, கமல்ஹாசன் இயக்கிய ‘ஹே ராம்’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் எதிர்பார்த்த வசூலை பெறாவிட்டாலும் நல்ல விமர்சனத்தை பெற்றது. இதையடுத்து, ‘விருமாண்டி’, ‘விஸ்வரூபம்’ போன்றா பல படங்களை கமல்ஹாசன் இயக்கினார்.கதையாசிரியர்நடிகர் கமல்ஹாசன் பல படங்களில் கதையாசிரியராகவும் இணை கதையாசிரியராகவும் பணிப்புரிந்துள்ளார். ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘தேவர் மகன்’, ‘மகாநதி’, ‘ஹேராம்’, ‘ஆளவந்தான்’, ‘அன்பே சிவம்’, ‘நள தமயந்தி’, ‘விருமாண்டி’, ‘தசாவதாரம்’, ‘மன்மதம் அம்பு’ போன்ற படங்களில் நடிகர் கமல்ஹாசன் வார்த்தை ஜாலங்கள் மற்றும் காமெடி கருத்துக்களை பயன்படுத்தியிருப்பார்.பாடலாசிரியர்கமல்ஹாசன் குடும்பம் ஒரு இசைக்குடும்பமாகும். ‘நினைவோ ஒரு பறவை’, இஞ்சி இடுப்பழகி’, ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ போன்ற பல பாடல்களை நடிகர் கமல்ஹாசன் மிகவும் திறமையாக பாடியிருப்பார். இந்த பாடல்கள் இன்று வரையிலும் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளது. மேலும், தனுஷ் நடித்த ‘புதுப்பேட்டை’ திரைப்படத்தில் ‘நெருப்பு வாயினில் ஓரமாய் எரியும்’ பாடலை பாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல், ‘விஸ்வரூபம்’, ‘தக் லைஃப்’ போன்ற பல படங்களில் பாடல்களும் எழுதியுள்ளார்.நடன இயக்குநர் மற்றும் மேக் அப் ஆர்ட்டிஸ்ட்ஆரம்பத்தில் நடிகர் கமல்ஹாசன் சினிமாத் துறையில் நடன உதவியாளராக இருந்துள்ளார். இவர் மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்களில் நடன உதவியாளராக இருந்ததாக கூறப்படுகிறது. ‘தூங்காவனம்’ திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன், துணை நடிகர்களுக்கு மேக்அப் போடும் வீடியோவும் வைரலானது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க லிங்கை கிளிக் செய்க