சினிமா

சிவகார்த்திகேயன் இப்படியொரு வம்சாவளியை சேர்ந்தவரா.? ஷாக்கில் ரசிகர்கள்.!

Published

on

சிவகார்த்திகேயன் இப்படியொரு வம்சாவளியை சேர்ந்தவரா.? ஷாக்கில் ரசிகர்கள்.!

தமிழ் திரையுலகில் நகைச்சுவையுடன் கலந்த உணர்ச்சிப் படங்களால் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன், இன்று ஒரு திறமையான நடிகராக மட்டுமல்லாமல், ஒரு பெருமைக்குரிய இசை மரபின் வாரிசாகவும் திகழ்கிறார் என்பது பலருக்கும் ஆச்சரியத்தை அளிக்கிறது.இசை உலகில் தங்கள் தெய்வீகமான நாதஸ்வர கலை திறமையால் அசைக்க முடியாத இடத்தைப் பெற்றிருந்த திருவீழிமிழலை சகோதரர்கள், எஸ். சுப்பிரமணிய பிள்ளை மூத்தவர் மற்றும் எஸ். நடராஜ சுந்தரம் பிள்ளை இவர்களின் வம்சாவளியில் இருந்தே நடிகர் சிவகார்த்திகேயன் வந்துள்ளார்.1900 முதல் 1984 வரையிலான கால கட்டத்தில் தமிழ்நாட்டில் நாதஸ்வரக் கலையை வளர்த்ததில் திருவீழிமிழலை சகோதரர்கள் அளித்த பங்களிப்பு மறக்க முடியாதது. நாதஸ்வரம் என்பது தமிழர் பண்பாட்டின் ஆன்மாவாகக் கருதப்படும் இசைக் கருவி. அதை தெய்வீக கலை அளவுக்கு உயர்த்தியவர்கள் இவர்களே என்று சொல்லலாம்.இப்படிப்பட்ட தெய்வீகமான இசைக் கலை மரபிலிருந்து வந்தவர் தான் இன்று தமிழ் திரையுலகின் வெற்றிகரமான நடிகர்களில் ஒருவராக திகழும் சிவகார்த்திகேயன். அவரது குடும்ப வம்சம் நாதஸ்வரக் கலையின் பெருமையுடன் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு பெரும் பெருமையை அளிக்கிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version