பொழுதுபோக்கு

முக்கிய நபர்களை நாக்அவுட் செய்யும் பிக்பாஸ் – இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேறியது இவர்தான்!

Published

on

முக்கிய நபர்களை நாக்அவுட் செய்யும் பிக்பாஸ் – இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேறியது இவர்தான்!

பிக்பாஸ் நிகழ்ச்சி பல விமர்சனங்களுக்கு மத்தியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த சீசன்களை விட தற்போது உள்ள சீசன் மிகவும் மோசமாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்கும் முயற்சியில் சமீபத்தில் வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே சென்றன. சரி எதாவது மாற்றம் ஏற்படும் என்று ஆடியன்ஸ் ஆர்வமாக இருந்த நிலையில் அவர்களும் உள்ளே சென்று சண்டை தான் போடுகின்றனர்.பிக்பாஸ் நிகழ்ச்சியை சரி செய்துவிடும். உள்ளே இருப்பவர்களை வெளுத்து வாங்குவோம் என்று பில்டப் விட்டவர்கள் எல்லாம் தற்போது ஏற்கனவே இருக்கும் கூட்டத்துடன் சேர்ந்து சண்டை போட்டு தான் வருகிறார்கள். பாடி ஷேமிங் செய்யாதீங்க என்று சொல்லும் திவ்யாவே அவ்வப்போது பாடி ஷேமிங் செய்து வருகிறார். இதுகுறித்து கேட்டால் இது பாடி ஷேமிங்கா? நான் அப்படி நினைத்து சொல்லவில்லை காமெடியாக தான் சொன்னேன் என்கிறார்.இது ஒருபுறம் இருக்க வழக்கம் போல் பார்வதி ‘வுமன் கார்டு’ யூஸ் செய்து கேமை பிளே செய்து வருகிறார். அதாவது பிரஜின் என்னை வெளியே தப்பா போட்ரேட் பண்றாரு. இவர்கள் எல்லாம் பிற்போக்கு வாதிகள் என தன் மீது உள்ள தவறை மறைக்க மற்றவர்கள் மீது பழி போட்டு வருகிறார். அடுத்தது நமது வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர். அவ்வப்போது நடிப்பு அரக்கன் என சொல்லிக் கொண்டு பிக்பாஸ் வீட்டிலும் ரீல்ஸ் தான் செய்து வருகிறார்.வேலை செய்யமாட்டேன் ஆனால், புகழ் மட்டும் வேண்டும் என்ற எண்ணத்தில் பிக்பாஸ் வீட்டில் வலம் வருகிறார்.  தன்னை புகழ்ந்தால் அவர்களுடன் ஜோடி சேர்ந்து சுற்றும் திவாகர், தன்னை யாராவது குற்றம் சொல்லிவிட்டால் நாமினேஷன், பெஸ்ட் பர்ஃபாமெர் போன்ற இடங்களில் கரை வைத்து பழி தீர்த்து வருகிறார். பிக்பாஸ் வீட்டில் ரீல்ஸ் செய்யாதீர்கள் என விஜய் சேதுபதி சொல்லியுமே அவர் அசரவில்லை. நீங்க என்ன சொல்றது நான் என்ன கேக்குறது என்ற எண்ணத்தில் தொடர்ந்து ரீல்ஸ் மட்டுமே செய்து வருகிறார்.பிக்பாஸ் வீட்டில் இருந்து திவாகர், பார்வதியை மட்டும் வெளியேற்றினால் நிகழ்ச்சி சூப்பராக போகும் என நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த வாரம் திவாகர் கண்டிப்பாக வெளியேறிவிடுவார் என்று நினைத்த ஆடியன்ஸுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது. அதாவது இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து பிரவீன் ராஜ் எலிமினேட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version