பொழுதுபோக்கு
அண்ணானு சொல்லிட்டு சைட் அடிக்கிறீயே; பார்வதிக்கு ஷாக் கொடுத்த சாண்ட்ரா: பிரஜின் சரியான பதிலடி!
அண்ணானு சொல்லிட்டு சைட் அடிக்கிறீயே; பார்வதிக்கு ஷாக் கொடுத்த சாண்ட்ரா: பிரஜின் சரியான பதிலடி!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் பல கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில் பெரிய எதிர்பார்ப்போடு நடந்து வரும் நிலையில், வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே வந்த பிரஜினை அண்ணா என்று சொல்லிவிட்டு பார்வதி அவரை சைட் அடித்ததாக சாண்ட்ரா கூறியுள்ளார்.கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், 8-வது மற்றும் தற்போது நடைபெற்ற வரும் 9-வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கமல்ஹாசன் அளவுக்கு இல்லை எனறாலும், விஜய் சேதுபதி பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு செல்கிறார் என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால இந்த 9-வது சீசன் ஆரம்பம் முதலே கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.இந்த விமர்சனங்களுக்கு முக்கிய காரணம், அகோரி கலையரசன், வாட்டர்மிலன் ஸ்டார் திவாகர் உள்ளிட்ட சில போட்டியாளர்கள் தான் என்று கூறப்படுகிறது. ஆனாலும் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கும் ரசிகர்கள் நெட்டிசன்கள் என பலரும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் முதல் வாரம், இயக்குனர் பிரவீன் காந்தி வெளியேற்றப்பட்ட நிலையில், கடந்த வாரம் அகோரி கலையரசன் வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து தற்போது துஷார் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனிடையே தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோவில் போட்டியாளர்கள் மத்தியில் பேசும் பார்வதி, பிரஜின் அண்ணா செய்தது எனக்கு வருத்தமாக உள்ளது. நான் அண்ணா என்ற அடிப்படையில் தான் அவர் தோலில் கை வைத்தேன். ஆனால் அவர் என் கையை தட்டிவிட்டுவிட்டார். அப்போது என் கை கனி அக்கா மீதும் பட்டது என்று சொல்ல, இதற்கு பிரஜின் பதிலடி கொடுத்துள்ளார். இதில். நான் பேச்சிலர் இல்லை. எனக்கு ஒரு குடும்பம் இருக்கிறது. நான் ஒரு நோக்கத்திற்காக பிக்பாஸ் வந்திருக்கிறேன். அதை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறேன். இந்த நேரத்தில் என்னை வந்து கட்டிபிடிப்பது எனக்கு பிடிக்காது என்ற சொல்ல, நான் கைதான் வைத்தேன் அண்ணா கட்டிப்பிடிக்கவில்லை என்று பார்வதி சொல்ல, எனக்கு அக்காவும் வேண்டாம் தங்கையும் வேண்டாம. தயவு செய்து என்னை வைத்து கண்டெண்ட் க்ரியேட் பண்ணாதீங்க என்று சொல்கிறார். அதன்பிறகு பிரஜினின் மனைவியும், போட்டியாளருமான சாண்ட்ரா நீ அண்ணா என்ற சொல்லிவிட்டு சைட் அடிச்சல்ல என்று பார்வதியை பார்த்து கேட்க அவர் உடனே ஷாக் ஆகிறார். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.