வணிகம்
ஆதார் கார்டு தொலைந்து விட்டதா? 2 நிமிடத்தில் ஆன்லைனில் மீட்டெடுப்பது எப்படி?
ஆதார் கார்டு தொலைந்து விட்டதா? 2 நிமிடத்தில் ஆன்லைனில் மீட்டெடுப்பது எப்படி?
உங்கள் ஆதார் அட்டை (Aadhaar Card) அல்லது ஆதார் எண் (Aadhaar Number) தொலைந்துவிட்டதா? அல்லது மறந்துவிட்டதா? இனி கவலை இல்லை! இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), “UID/EID-ஐ மீட்டெடுக்கும் சேவை” (Retrieve UID/EID) மூலம் உங்கள் ஆதார் விவரங்களை மீண்டும் பெறுவதை மிகவும் எளிமையாக்கியுள்ளது. உங்கள் மொபைல் எண் இணைக்கப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும், ஆன்லைனில் அல்லது அருகிலுள்ள ஆதார் மையத்தில் உங்கள் ஆதாரை மீட்டெடுக்கலாம். ஆன்லைன் மூலம் ஆதாரை மீட்டெடுப்பது எப்படி? (மொபைல் எண் இணைக்கப்பட்டிருந்தால்)உங்கள் மொபைல் எண் ஆதாருடன் இணைக்கப்பட்டிருந்தால், ஆதார் (UIDAI) இணையதளத்தில் உள்ள “Retrieve UID/EID” அம்சத்தின் மூலம் உங்கள் விவரங்களை மிக எளிதாக மீட்டெடுக்கலாம்.முதலில், நீங்கள் ஆதார் எண் (UID) அல்லது பதிவு ஐடி (EID) – இதில் எதை மீட்டெடுக்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.உங்கள் முழுப் பெயர், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரி மற்றும் காப்ச்சா குறியீட்டை (Captcha Code) உள்ளிடவும்.உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு ஓ.டி.பி. (OTP) அனுப்பப்படும்.வெற்றிகரமாகச் சரிபார்க்கப்பட்டதும், உங்கள் ஆதார் எண் அல்லது பதிவு ஐடி (EID) உங்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும்.சிறப்பம்சம்: இந்தச் சேவை முற்றிலும் இலவசமானது மற்றும் சில நிமிடங்களில் முடித்துவிடலாம்.ஆஃப்லைன் மூலம் ஆதாரை மீட்டெடுப்பது எப்படி? (மொபைல் எண் இணைக்கப்படாவிட்டால்)உங்கள் மொபைல் எண் ஆதாருடன் இணைக்கப்படாமல் இருந்தால், நீங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஆதார் மையத்திற்குச் செல்ல வேண்டும்.1. ஆதார் மையத்தில் பயோமெட்ரிக் சரிபார்ப்புமையத்தில், உங்கள் பெயர், பாலினம், மாவட்டம் அல்லது அஞ்சல் குறியீடு (PIN Code) போன்ற விவரங்களை வழங்க வேண்டும்.இதைத் தொடர்ந்து, கைரேகை (Fingerprint) அல்லது கருவிழி ஸ்கேன் (Iris Scan) ஆகியவற்றைப் பயன்படுத்தி பயோமெட்ரிக் சரிபார்ப்பு செய்யப்படும்.தரவு பொருத்தப்பட்டதும், ஆப்பரேட்டர் உங்களுக்கு ஈ-ஆதார் (e-Aadhaar) கடிதத்தின் நகலை அச்சிட்டுத் தருவார். இதற்கு ரூ. 30 பெயரளவு கட்டணம் வசூலிக்கப்படும்.2. (UIDAI) உதவி எண்ணைப் பயன்படுத்துதல் (Helpline – 1947)ஆதார் (UIDAI) உதவி எண்ணுக்கு (1947) அழைத்து, ஒரு பிரதிநிதியுடன் பேசவும். உங்கள் விவரங்களைப் (Demographic details) பகிரவும். தகவல் பொருத்தமானால், உங்கள் பதிவு ஐடி (EID) உங்களுக்கு வழங்கப்படும்.மீண்டும் அழைத்து, (IVRS விருப்பத்தைப் பயன்படுத்தி) உங்கள் பதிவு ஐடி (EID), பிறந்த தேதி மற்றும் பின் (PIN) குறியீட்டை உறுதிப்படுத்திய பிறகு, உங்கள் ஆதார் எண்ணை மீட்டெடுக்கலாம்.இந்த உதவி மையச் சேவை இலவசமாகக் கிடைக்கிறது.ஆதார் கடிதத்தையே தொலைத்துவிட்டால் என்ன செய்வது?உங்கள் ஆதார் கடிதத்தை நீங்கள் தொலைத்துவிட்டால், கவலையே வேண்டாம். உங்கள் ஆதார் எண் அல்லது ஒப்புகை சீட்டில் உள்ள 28 இலக்கப் பதிவு ஐடியை (Enrolment ID) பயன்படுத்தி அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்திற்குச் செல்லவும். பயோமெட்ரிக் சரிபார்ப்புக்குப் பிறகு, ஆப்பரேட்டர் உங்கள் இ- ஆதார் (e-Aadhaar) அச்சிட்டு வழங்குவார். இதற்கும் ரூ. 30 கட்டணம் பொருந்தும்.ஆதார் ஆணையத்தின் (UIDAI) இந்தச் சீரான ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் அமைப்புகள் மூலம், பயனர்கள் தேவையற்ற தாமதங்கள் மற்றும் காகித வேலைகள் இல்லாமல், தங்கள் ஆதார் சான்றுகளை எளிதில் மீட்டெடுக்க முடியும்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்!