பொழுதுபோக்கு
இது வார்த்தை இல்லை வலி… ஏற்றத்தாழ்வு பார்க்கிறார்; திவாகரால் மனமுடைந்து போன கானா வினோத்
இது வார்த்தை இல்லை வலி… ஏற்றத்தாழ்வு பார்க்கிறார்; திவாகரால் மனமுடைந்து போன கானா வினோத்
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் பல விமர்சனங்களை சந்தித்து வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள் போட்டியாளர்கள் தேர்வில் சிறிது கவனம் செலுத்தி இருக்கலாம் என்று நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிக்பாஸ் வீட்டில் பெரும்பாலும் பிரச்சனைகளை உருவாக்குவது பார்வதி மற்றும் திவாகராக தான் இருக்கும். திவாகரை ஆரம்பத்தில் அனைவரும் பாராட்டி வந்தனர். குறுகிய காலாத்தில் இப்படி இடத்திற்கு சென்றுவிட்டார் என்று. அதுமட்டுமல்லாமல், பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் திவாகருக்கு தான் அதிக ஃபாலோவர்ஸ்கள் இருந்தனர்.ஆனால், தற்போது திவாகர் செய்யும் வேலைகளை பார்த்த ஆடியன்ஸ்கள் தயவு செய்து அவரை வெளியே அனுப்புங்கள் என்று கதறி வருகின்றனர். அவர் செய்வதை சக போட்டியாளர்கள் தவறு என்று சொல்லிவிட்டால் வன்மத்தில் பேசுகிறார்கள், பொறாமையில் கொந்தளிக்கிறார்கள் என்று பல்வேறு விதமாக விமர்சித்து வருகிறார். அதேபோன்று திவாகர், பார்வதி நிழலில் மறைந்து கொண்டு தன்னை நல்லவர் போன்று காண்பித்து வருவதாக கூறப்படுகிறது.ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது என்றால் அந்த டாஸ்கிற்கான உடல் உழைப்பு எதுவும் போடாமல் புகழாரம் மட்டும் வேண்டும் என்ற எண்ணத்தில் வலம் வருகிறார். அதேபோன்று சக போட்டியாளர்கள அவரை தாண்டி போகும் பொழுது அந்த போட்டியாளர்களின் மீது உள்ள வன்மத்தை வெளிப்படையாக சொல்லிவிட்டு பின்னர் நான் உங்களை சொல்லவில்லை என்று சமாளித்து வருவதாக நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.This is just not words, it’s pain. Clearly Vinoth felt discrimination from Wmelon. ☹️Shame on you @VijaySethuOffl@vijaytelevision bringing such charector to regional media.#GanaVinoth#BiggBossTamil9#BiggBossTamilSeason9pic.twitter.com/c9XT0YpJYEபிக்பாஸ் வீட்டில் ரீல்ஸ் செய்யாதீர்கள் என்று விஜய் சேதுபதி பலமுறை கண்டித்தும் திவாகர் அதை மட்டும் தான் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், சக போட்டியாளர்களிடம் ஏற்றத் தாழ்வு பார்த்து திவாகர் பழகுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. திவாகர் எவிக்டாகி வெளியே வந்தாலும் பிக்பாஸிற்கு என் மேல் பொறாமை, அதனால் தான் என்னை வளர விடாமல் எவிக்ட் செய்துவிட்டார்கள் என்று குற்றம்சாட்டவும் வாய்ப்புள்ளது. இப்படி பிக்பாஸ் வீட்டில் பல வேலைகளை பார்த்து வரும் திவாகர் மீது போட்டியாளர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை குவித்து வருகின்றனர்.தற்போது திவாகர் குறித்து கானா வினோத் மனமுடைந்து பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், “வேறு யாராவது இருந்தால் இதை காப்பாற்றிக் கொள்வார்கள். திவாகர் நான் கிண்டல் செய்வதாக நினைத்துக் கொள்கிறார். ஏற்றத்தாழ்வு பார்க்கிறார். நீ சொல்லி நான் கேட்க வேண்டுமா என்று நினைக்கிறார். ஒரு கலைஞன் இப்படி இருக்கக் கூடாது” என்று வருதத்துடன் பேசுகிறார்.