சினிமா

இந்த ரணகளத்திலும் குதூகலம் கேட்குது போலயே.. வெளியானது ஜனநாயகன் படத்தின் சூப்பரான அப்டேட்.!

Published

on

இந்த ரணகளத்திலும் குதூகலம் கேட்குது போலயே.. வெளியானது ஜனநாயகன் படத்தின் சூப்பரான அப்டேட்.!

தமிழ் திரையுலகில் தற்போது ரசிகர்களின் கவனம் முழுவதும் ஈர்த்திருக்கும் படம் “ஜனநாயகன்”. ஹெச்.வினோத் இயக்கத்தில், தளபதி விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படம் குறித்து ஏற்கனவே பல எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளன. இன்று மாலை 06.03க்கு இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.அனிருத் இசையமைத்துள்ள இந்த பாடல் “தளபதி கச்சேரி..” என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் வெளியீட்டுக்காக தளபதி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர்.அனிருத் – விஜய் இணைப்பு எப்போதும் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். “கத்தி”, “மாஸ்டர்”, “பீஸ்ட்” ஆகிய படங்களில் இவர்களின் கூட்டணியில் வெளியான பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. அதே போல், “ஜனநாயகன்” படத்தின் முதல் பாடல் “தளபதி கச்சேரி..” மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.இப்போது ஹெச்.வினோத்- தளபதி விஜயுடன் இணைந்து உருவாக்கும் “ஜனநாயகன்” படம், அரசியல் மற்றும் சமூகப் பின்னணியில் உருவாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் விஜயின் கதாபாத்திரம் பொதுமக்களின் குரலை பிரதிபலிக்கும் தலைவராக இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version