இந்தியா

இலங்கையில் கைதான மீனவர்கள் விடுதலைக்கு தவெக உண்ணாவிரதம்!

Published

on

இலங்கையில் கைதான மீனவர்கள் விடுதலைக்கு தவெக உண்ணாவிரதம்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 35 இந்திய கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுவிக்குமாறு  கோரி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நாகப்பட்டினத்தில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தியது.

நாகப்பட்டினத்தில் நேற்று நடத்தப்பட்ட இந்த  உண்ணாவிரத போராட்டத்தில், தவெக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். கடந்த நாட்களில்  இலங்கை கடற்படையினரால் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 35 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதே இந்த போராட்டத்தின் முதன்மைக் கோரிக்கையாகும்.

Advertisement

மேலும், தமிழக கடற்றொழிலாளர்களின் மீன்பிடி உரிமைகளை மீட்டெடுப்பது, பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்டெடுப்பது மற்றும்  வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது தொடர்பில் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version