பொழுதுபோக்கு
கமல்ஹாசனை யார் பாா்ப்பார்கள்? படத்தை வாங்க மறுத்த விநியோகஸ்தர்; அவருக்கே ஷாக் கொடுத்த படத்தின் வெற்றி!
கமல்ஹாசனை யார் பாா்ப்பார்கள்? படத்தை வாங்க மறுத்த விநியோகஸ்தர்; அவருக்கே ஷாக் கொடுத்த படத்தின் வெற்றி!
என் 25 வருட சினிமா அனுபவத்தில் முதல் முறையாக நன்றாக இல்லை என்று நான் சொன்ன படம் என்னையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் வெற்றி பெற்றுள்ளது என்று ஒர விநியோகஸ்தரை புலம்ப வைத்துள்ளது கமல்ஹாசன் – கே.பாலச்சந்தர் கூட்டணி.தமிழ் சினிமாவில் இயக்குனர் சிகரம் என்று அழைக்கப்படும் கே.பாலச்சந்தர், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய பெருமைக்கு சொந்தக்காரர். தமிழ் மட்டும் இல்லாமல், தெலுங்கு, கன்னடம் இந்தி ஆகிய மொழிகளிலும் பல படங்களை இயக்கியுள்ள கே.பாலச்சந்தர் கடந்த 1979-ம் ஆண்டு தெலுங்கில் மரோ சித்ரா என்ற படத்தை இயக்கியிருந்தார். கமல்ஹாசன் சரிதா நடிப்பில வெளியான இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தை ‘ஏக் துஜே கே லியே’ என்ற பெயரில் இந்தியில படமாக்கினார்கள். கே.பாலச்சந்தரே இயக்கிய இந்த படத்தில் கமல்ஹாசன் நாயகனாக நடித்திருந்த நிலையில், ரதி அக்னி கோத்ரி நாயகியாக நடித்திருந்தார். எல்.வி.பிரசாத் இந்த படத்தை தயாரித்திருந்தார். தெலுங்கு சினிமாவின் க்ளைமேக்ஸில் நாயகியை ரேப் செய்து கொலை செய்வது போல் காட்டியிருப்பார்கள். ஆனால் இந்தியில் கொலை மட்டுமே போதும் என் எல்.வி.பிரசாத் சொன்னதால் கே.பாலச்சந்தரும் அப்படியே படமாக்கியுள்ளார். படம் முடிந்து முழு படத்தையும் பார்த்த எல்.வி.பிரசாத் ரேப் இல்லாமல் படம் முழுமையான இருக்காதே என்று கூறியுள்ளார். ஆனாலும் மீண்டும் ரேப் சீன் எடுக்க வேண்டும் என்றால், விசாகப்பட்டிணம் போக வேண்டுமே என்ற சொல்ல, இல்லை நானே எடிட்டிங்கில் செய்கிறேன் என்று சொல்லி பாலச்சந்தரே ஷூட்டிங் இல்லாமல் எடிட்டிங்கில் ரேப் சீனை கொண்ட வந்துள்ளார். அதன்பிறகு தியேட்டரில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் வெளியாகி 3 வாரங்கள் கழித்து அமிதாப் பச்சன் படம் வெளியானது.அமிதாப் படம ஏக் துஜே கே லியே படத்திற்கு தடையாக இருக்கும் என்று நினைத்தபோதும், அமிதாப் படத்தை விட இந்த படத்திற்க அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தை பார்த்த அன்றைய பாலிவுட் ஸ்டார் ராஜ்கபூர் கூட படம் சூப்பர் கடைசியில் இந்த ரேப் எதற்காக என்று கேட்டுள்ளார். ஆனால், கே.பாலச்சந்தரோ அவரின் கேள்வி தான் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கும் என்ற கூறியுள்ளார். ரேப் சீன் முடிந்தவுடன், யாரும் வெளியில் செல்லாமல் த என்ட் கார்டு போடும் வரை படத்தை பார்த்துவிட்டு சென்றுள்ளனர். வழக்கமாக கே.பாலச்சந்தர் படத்தை விநியோகம் செய்யும் ஒருவர் இந்த படத்தை பார்த்துவிட்டு, கமல்ஹாசனை யார் பார்ப்பார் என்று சொல்லி, படத்தை வாங்க மறுத்துள்ளார். ஆனால் எல்.வி.பிரசாத் அவரது மகன் ஆகிய இருவரும் கேட்டுக்கொண்டதால் படத்தை வாங்கி வெளியிட்டுள்ளார். அவரது கணிப்பையே பொய்யாக்கும் வகையில், இந்த படம பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. அதன்பிறகு அவரே எனது 25 வருட சினிமா அனுபவத்தை இந்த படம் ஓடாது என்று சொல்லி பெரிய வெற்றியை பெற்றது இந்த படம் தான் என்று கூறியதாக இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.