இலங்கை
காலி – கொழும்பு பிரதான வீதி விபத்தில் சிறுவன் பலி!
காலி – கொழும்பு பிரதான வீதி விபத்தில் சிறுவன் பலி!
காலி – கொழும்பு பிரதான வீதியில் வெட்டுமகடை சந்திக்கருகில், துவிச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவன் ஒருவன் லொறி ஒன்றில் மோதி உயிரிழந்துள்ளார்.
காலிப் பகுதியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த லொறி, நேற்று இரவு வீதியை கடக்க முற்பட்ட துவிச்சக்கர வண்டியில் மோதியுள்ளது. குறித்த விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் களுத்துறை நாகொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த சிறுவன் 11 வயதுடைய கட்டுக்குறுந்த பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் களுத்துறை நாகொடை மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்துக்கு காரணமான லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்குப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.