பொழுதுபோக்கு

கிரிஷ் அம்மா ரோகிணியா? உண்மையை கண்டுபிடித்த மீனா; சீரியஸ் களத்தில் சிறகடிக்க ஆசை!

Published

on

கிரிஷ் அம்மா ரோகிணியா? உண்மையை கண்டுபிடித்த மீனா; சீரியஸ் களத்தில் சிறகடிக்க ஆசை!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘சிறகடிக்க ஆசை’. இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதில் பொய் சொல்லி அனைவரையும் ஏமாற்றும் விஜயாவின் முதல் மருமகள் ரோகிணி என்னைக்கு விஜயாவிடம் மாட்டுவார் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்திருக்கின்றனர். இந்நிலையில், ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் புது எபிசோட் குறித்து பார்க்கலாம்.ரோகிணியின் மகனை பார்க்க வரும் தம்பதிரோகிணியின் முதல் கணவர் சேகரின் அண்ணன் சென்னைக்கு வந்திருக்கும் நிலையில், அவர் ரோகிணியின் அம்மா லட்சுமிக்கு போன் செய்து கிரிஷை பார்க்க வருவதாக சொல்கிறார். அவர்கள் கெஞ்சிக் கேட்டதால், ரோகிணிக்கு தெரியாமல் கோவிலில் வைத்து கிரிஷை அவர்களுக்கு காட்ட முடிவு செய்கிறார் லட்சுமி. அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்து கிரிஷை பார்க்க வருகிறார்கள். அவர்கள் முத்துவின் காரில் கோவிலுக்கு வருகிறார். அந்த தம்பதிகள் யார் என்று தெரியாததால் முத்து எப்போதும் போல் சென்னையில் எங்கு போக வேண்டுமோ சொல்லுங்கள் நான் கூட்டிச் செல்கிறேன் என்கிறார். அதற்கு அவர்கள் எங்க வாழ்க்கையில் நாங்கள் ஒரு பாவத்தை செய்துவிட்டோம். அதனால் தான் எங்களுக்கு குழந்தையே இல்லை என சொல்கிறார். உடனே முத்து, நீங்க யாரையாவது தத்தெடுத்து கூட வளர்க்கலாமே சார் என சொல்ல, அதற்கு அவர்கள், என் தம்பி பையன் இருக்கான் என பேசிக்கொண்டே வருகிறார்கள். மீனாவிடம் வசமாக சிக்கிய ரோகிணிஇதையடுத்து தீபாவளி கொண்டாட முத்து, மீனா, ரோகிணி, மனோஜ் என அண்ணாமலையின் குடும்பத்தினர் அனைவரும் அண்ணாமலையின் அம்மா ஊருக்கு செல்கிறார்கள். அப்போது அந்த ஊர் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று தன் தந்தைக்கு திதி கொடுக்க செல்கிறார் ரோகிணி. அந்த கோவிலுக்கு மீனாவும் வர, அங்கு கிரிஷ், லட்சுமி ஆகியோருடன் ரோகிணி அமர்ந்திருப்பதை பார்த்துவிடுகிறார். அப்போது லட்சுமி, ஐயரிடம், என்னோட ஒரே பொண்ணு கல்யாணி இவதான் என்று சொல்ல, அதைக்கேட்டு மீனா ஷாக் ஆகிறார். பின்னர் ரோகிணியை தனியே அழைத்து சென்று இத்தனை நாள் எங்களையெல்லாம் ஏமாத்துனியா என பளார் என ஒரு அறைவிடுகிறார். இந்த பார்த்த ஆடியன்ஸ் உற்சாகமடைந்துள்ளனர். இதனால் இனி வரும் எபிசோடுகள் பரபரப்புடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version