பொழுதுபோக்கு
கிழிக்கப்பட்ட பார்வதியின் முகத்திரை… கொளுத்திப்போடும் வியானா; கையும் களவுமாக பிடித்த பிக்பாஸ்
கிழிக்கப்பட்ட பார்வதியின் முகத்திரை… கொளுத்திப்போடும் வியானா; கையும் களவுமாக பிடித்த பிக்பாஸ்
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கி 30 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. எப்போதும் இல்லாமல் இந்த சீசனில் சமூக வலைதளப் பிரபலங்கள் பலர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். பிக்பாஸ் வீடு என்றாலே பிரச்சனைகள் நிறைந்ததாக தான் இருக்கும், ஆனால் சீசன் 9 நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் பிரச்சனையா? அல்லது பிரச்சனையில் பிக்பாஸ் வீடா? என்று அறியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். பொழுது போக்கிற்காக பிக்பாஸ் பார்த்து வந்த மக்கள் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தால் மன அமைதி கெட்டுவிடும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.அதாவது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக பிக்பாஸ் வீட்டில் பிரச்சனைகள் அரங்கேறி வருகிறது. பிரச்சனைகளை உருவாக்குவதற்கு மூலக்காரணமாக இருப்பதே வி.ஜே.பார்வதியும் திவாகரும் தான் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இவர்கள் இருவர் இல்லாமல் ப்ரோமோ கூட வருவதில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாங்கள் தான் வெளியில் தெரிய வேண்டும் என்று பார்வதியும் திவாகரும் பல வேலைகளை செய்து வருகின்றனர்.சரி சாதாரண நேரம் தான் சண்டை போடுகிறீர்கள் டாஸ்க் கொடுத்தாலாவது ஒன்று சேர்ந்து செய்வார்கள் என்று பார்த்தால் அதுவும் இல்லை. சமீபத்தில் ஹோட்டல் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் விருந்தாளிகளாக வந்த தீபக், பிரியங்கா, மஞ்சரி ஆகிய மூன்று பேரும் போட்டியாளர்களை வாங்கு… வாங்கு என்று வாங்கினர். தீபக் அழுதேவிட்டார். இப்படி பிக்பாஸ் வீட்டில் பிரச்சனைகள் மட்டுமே தினமும் மேலோங்கி வருகிறது. ஒன்றாக சேர்ந்து விளையாடுவோம் ஆடியன்ஸை உற்சாகப்படுத்துவோம் என்ற எண்ணத்தில் யாருமே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்று சினிமா வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.இந்நிலையில் நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல பிரச்சனைகள் வெடித்தது. அதாவது, பார்வதி, பிரஜின் மீது கை வைத்து நான் அப்படி சொல்லவில்லை அண்ணா என்று சொல்கிறார். பார்வதி கை வைத்ததை பிடிக்காத பிரஜின் கையை தட்டிவிடுகிறார். இதை வைத்தே பார்வதி பேசுகிறார். இவரை நான் என்ன செய்யப் போகிறேன் இப்படி செய்கிறார் என்று பேசுகிறார். அதுமட்டுமல்லாமல், பார்வதி இப்படி தான் என்று வெளியில் காண்பிப்பதற்காக இப்படி பேசுகிறார். மக்கள் எல்லாம் பார்த்துப்பாங்க என்று அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைக்கிறார்.இதற்கு சப்போர்ட் செய்யும் வியானா, பார்வதியை நல்ல ஏத்திவிடுகிறார். ஒரு தேசிய தொலைக்காட்சியில் வந்து இப்படியெல்லாம் சொன்னால் நாளைக்கு ஒரு பொண்ணா உன் பெயர் என்ன ஆகும். நீ போய் பிரஜினியிடம் கேள் என சொல்லிகிறார். ஆனால், பார்வதி அதை தவிர்த்துவிடுகிறார். அதன்பின்னர், டாஸ்கிற்காக எல்லோருக்கும் பனியன்கள் கொடுக்கப்பட்டது. அப்போது வியானா பனியனை எடுக்காமல் அவங்க கொண்டு வருவாங்க அப்போ வாங்கிக்கலாம் என்று சொல்கிறார். அதன் பின்னர் மைக் மேலேவே பனியனை போடுகிறார். இதை பார்த்த பிக்பாஸ் மைக்கை எடுத்துட்டு பனியனை போடுங்க என்று சொல்கிறார்.அப்போது எல்லோரும் வந்து வியானாவிடம் பிக்பாஸ் என்ன சொன்னார் என்று கேட்கிறார்கள். அதற்கு வியானா பிக்பாஸ் சொன்னதை மட்டும் சொல்கிறார். அவர் பனியனை கொண்டு வந்து தருவார்கள் என்பதை சொல்லவில்லை. இதை பார்த்த பிக்பாஸ் நீங்கள் சொன்னதையும் சொல்லுங்கள் என்கிறார். இதை கேட்டதும் வியானா மாட்டிக்கிட்டோமே என்று ஷாக்காகிவிட்டார்.