இலங்கை
கேகாலை. அரச மருத்துவமனையில் பசியால் வாடும் நோயாளிகள்!
கேகாலை. அரச மருத்துவமனையில் பசியால் வாடும் நோயாளிகள்!
கேகாலை மாவட்டத்தில் உள்ள மகாபல்லேகம அரச மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு போதிய உணவு இல்லாமல் தவிப்பதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த மருத்துவமனையில் உணவு ஒப்பந்தத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளால், கடந்த 4 ஆம் திகதி முதல் உள்நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் உணவு இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இந்த உணவு ஒப்பந்தத்தை வாரகா போன்ற இதர சேவைகள் கூட்டுறவு சங்கம் ஏற்றுக் கொண்டிருப்பதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.இதனால், உள்நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் பெரும் சிரமத்தை எதிர் கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.