இலங்கை
சபையில் உறங்கிய அர்ச்சுனா எம்.பி ; வரவு செலவு திட்டம் குறித்து வெளியிட்டுள்ள தகவல்
சபையில் உறங்கிய அர்ச்சுனா எம்.பி ; வரவு செலவு திட்டம் குறித்து வெளியிட்டுள்ள தகவல்
வடக்கு மாகாணத்துக்கு எந்த நிதியும் இந்த முறை வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிட்ட அளவாக ஒதுக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தள்ளார்.
தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் தளத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
ஜனாதிபதியின் பேச்சு புத்தகமாக தரப்பட்டிருக்கிறது.
மேலோட்டமாக பார்த்தேன் வட மாகாணத்துக்குரிய எந்த சிறப்பு நிதியும் எங்கேயும் இல்லை.
வடக்கு மாகாணத்துக்கு எந்த நிதியும் இந்த முறை வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிட்ட அளவாக ஒதுக்கப்படவில்லை.
கடந்த முறை ஐயாயிரம் மில்லியன் வீதி அபிவிருத்திக்காகவும் 1500 மில்லியன் வட்டு வாகல் பாலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றெல்லாம் ஏமாற்றப்பட்டோம். நூலகத்துக்கு 200 மில்லியன் என்றார்கள்.இங்க இந்தத் தடவை எதுவுமே இல்லை.
கடந்த தடவை பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒன்பது தசம் மூன்று மில்லியன் கூட பாவிக்கவில்லை.
வடக்குக்காக ஒதுக்கப்பட்ட 5000 மில்லியன் நிதியும் பாவிக்கப்படவுமில்லை. திருப்பி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.திருப்பி கிடைக்கப் போவதுமில்லை. என்று தெரிவித்துள்ளார்