இலங்கை

சர்வதேச நாணய நிதியத்தால் எழுதப்பட்ட பட்ஜெட் – சஜித் விமர்சனம்!

Published

on

சர்வதேச நாணய நிதியத்தால் எழுதப்பட்ட பட்ஜெட் – சஜித் விமர்சனம்!

2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், சர்வதேச நாணய நிதியத்தால் எழுதப்பட்ட பட்ஜெட் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று தெரிவித்தார். 

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,  “ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சர்வதேச நாணய நிதியத்தால் எழுதப்பட்ட பட்ஜெட்டை வாசித்தது போல் தெரிகிறது.

Advertisement

வறுமையை ஒழிக்கும் திறன் அரசாங்கத்திடம் இல்லை என்பதை பட்ஜெட் உறுதிப்படுத்தியுள்ளது. விவசாயிகள், மீனவர்கள் மற்றும் வேலையற்ற பட்டதாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் அரசாங்கத்திடம் இல்லை. 

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு பங்களிக்கும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SME) உதவ முடியவில்லை.  தேர்தல்களின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கம் தவறிவிட்டது” எனக் கூறியுள்ளார். 

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version