பொழுதுபோக்கு
தர்ஷன் முதலிரவை களைத்த அன்புக்கரசி; தம்பியை கொல்ல துணிந்த குணசேகரன்: உயிருடன் திரும்புவானா சக்தி?
தர்ஷன் முதலிரவை களைத்த அன்புக்கரசி; தம்பியை கொல்ல துணிந்த குணசேகரன்: உயிருடன் திரும்புவானா சக்தி?
சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நாளுக்கு நாள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும நிலையி்ல், பார்கவி புடவையில் அழகாக அலங்கரித்து முதலிரவுக்கு தயார் செய்கின்றனர். தர்ஷனுக்கும் பார்கவிக்கும் முதலிரவு நடக்கும் விஷயத்தை தெரிந்து கொண்ட அன்புக்கரசியும் புடவை கட்டி மல்லிப்பூவை வைத்து முதலிரவுக்கு தயாராகி இருந்தாள். இன்று தர்ஷன் பார்கவி இருவரும் முதலிரவு அறையில் பல விஷயங்களை பேசிக்கொண்டு இருக்க. அன்புக்கரசி தர்ஷனுடன் எடுத்த அனைத்து போட்டோக்களையும் அவனது போனுக்கு அனுப்புகிறாள். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பார்கவி, கோபத்துடன் அறையை விட்டு வெளியே வந்துவிடுகிறாள், இந்த சத்தம் கேட்டு, அனைவரும் எழுந்து வந்து என்ன நடந்தது என்று கேட்கின்றனர். அப்போது தர்ஷன், அன்புக்கரசி போட்டோவை அனுப்பி பிரச்சனை கேட்கிறார் என சொல்ல தர்ஷினி கோவத்துடன் அன்புக்கரசி இருக்கும் அறைக்கு சென்று தட்டுகிறாள். ஆனால், அவள் கதவை திறக்காமல் இருக்க, ஜனனி அவளை சமாதானப்படுத்தி அழைத்து செல்கிறாள். அடுதது தனுஷ்கோடியில் இருக்கும் தேவகியின் குருஜி கண்ணதாசனை சந்திப்பதற்காக செல்லும சக்தியை பார்த்த குணசேகரின் அடியாள். குணசேகரனுக்கு போன் செய்து சொல்ல, அவன் என்ன செய்தாலும் எனக்கு போன் செய்து சொல், அளவுக்கு மீறி போன அவன் கதையை முடித்துவிடு என்கிறார் குணசேகரன்.இதையடுத்து வீட்டுக்கு வரும் குணசேகரன், ஜனனியிடம், ஒழுங்காக ராமேஸ்வரத்தில் இருக்கும் உன்னுடைய புருஷன் சக்தியை இங்கே வந்துவிட சொல்லு, இல்ல, அவன் ஒழுங்க வீடு திரும்பமாட்டான். அவனுக்கு தேதி குறிச்சாச்சு, அவன் உயிரோட இருக்க வேண்டும் என்று கடவுள் கிட்ட வேண்டிக்கோள் என்று சொல்ல, அதிர்ச்சியான ஜனனி, சக்திக்கு போன் செய்ய, சக்தி போனை எடுக்காததால் ஜனனி பதற்றம் அடைகிறாள். இதனால் கோபமான ஜனனி, குணசேகரிடம் இன்னும் எத்தனை பேரை, யார் யாரையெல்லாம் பழிவாங்க போறீங்க, உங்களுடைய கௌரவத்திற்காக எது வேண்டுமானாலும் செய்வீர்களா? என ஆத்திரத்தோடு கத்துகிறாள்.அப்போது குணசேகரன், ஜனனியை தள்ளிவிட அவள் கீழே விழுகிறாள். மறுபக்கம், தனுஷ்கோடியில் அடியாட்கள் சக்தியை சுற்றிவளைத்து கொல்வதற்காக வருகிறார்கள். அவரிகளிடம் சக்தி சண்டை போடுகிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.