பொழுதுபோக்கு
தாசி கேரக்டரில் நடிக்க ஆசை, ஆன இந்த இமேஜ் தான் பிரச்னை; ஒரு தலை ராகம் சுபத்ரா ஞாபகம் இருக்கா?
தாசி கேரக்டரில் நடிக்க ஆசை, ஆன இந்த இமேஜ் தான் பிரச்னை; ஒரு தலை ராகம் சுபத்ரா ஞாபகம் இருக்கா?
தாசி கேரக்டரில் நடிக்க ஆசைப்பட்டேன், ஆனால் ஒரு தலைராகம் படத்தில் நான் நடித்த கேரக்டர் திரைத்துறையில் எனக்கு க்ளாமர் வாய்ப்புகள் கிடைப்பதற்கு சற்ற தடங்கலாக இருந்தது என்று நடிகை ரூபா கூறியுள்ளார். 1980-ம் ஆண்டு வெளியான தமிழ் சினிமாவில் பெரிய வெற்றிப்படமாக வந்த படம் தான் ஒரு தலை ராகம். காதலை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த திரைப்படம், அந்த காலக்கடடத்தில் இளைஞர்கள் மத்தியில் பெரய வரவேற்பை பெற்றிருந்தது. டி.ராஜேந்தர் இந்த படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில், கதை மற்றும் திரைக்கதை ஆசிரியரைாக என்ட்ரி கொடுத்தார், பிரபல மலையாள நடிகர் சங்கர், சந்திரசேகர், உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு, டி.ஆர் பாடல்கள் எழுதியிருந்தார்.இந்த படத்தில் சுமித்ரா என்ற கேரக்டரில் நடித்து அசத்தியவர் தான் நடிகை ரூபா. படத்தில் ஒரு குடும்ப பெண் கேரக்டரில் அவரது நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பிறகு மீண்டும் டி.ஆர், இயக்கத்தில் வசந்த அழைப்புகள், ராகம் தேடும் பல்லவி, உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ரூபா, கடைசியாக 1990-ம் ஆண்டு ராமராஜன், ரேகா நடிப்பில் வெளியான பாட்டுக்கு நான் அடிமை என்ற படத்தில் ராமராஜனின் அக்கா கேரக்டரில் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் அவள் விகடன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ஒரு தலை ராகம் படம் எனக்கு இப்படி ஒரு வெற்றியை கொடுக்கும் என்ற எதிர்பார்க்கவில்லை. ஆனால் இந்த படத்தால் ரியல் வாழ்க்கையில், எனக்கு மதிப்பு கூடியது. வெளியில் எங்கு சென்றாலும், படத்தில் இருப்பது போல் இந்த பெண் ரியல் வாழ்க்கையிலும் இப்படித்தான் இருப்பார் போல என்ற நினைத்து யாரும் என்னிடம் தப்பான கண்ணோட்டத்துடன் நெருங்கியது இல்லை. ஆனால் திரைத்துறையில் எனக்கு வந்த வாய்ப்புகள் எல்லாமே ஒரு தலை ராகம் படம் போலவே வந்தது. அதனால் நான் நடிக்க விரும்பிய கேரக்டர் போல வரவில்லை. அப்படி இருந்தும் ஒரு தலை ராகம் படத்தை போல் சில படங்களில் நடித்தேன். அந்த படங்களும் எனக்கு வெற்றியை கொடுக்கவில்லை. ஆனால் ஒரு தலை ராகம் இமேஜ் கன்னடத்தில் எனக்கு பாதிப்பை கொடுக்கவில்லை. அங்கு நான் ராஜ்குமாருடன் இணைந்து க்ளாமர் கேரக்டரில் பல படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் தமிழ் மற்றும் தெலுங்கில் நான் ஒரு ஆர்ட் பிலிம் நடிகை தான். தமிழில் எச்சில் இரவுகள், மயில் போன்ற படங்களில் நடித்திருக்கிறேன். அதேபோல் தெலுங்கில் தாசி வேடத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். அந்த தாசி கேரக்டருக்கு நான் செட் ஆகமாட்டேன் என்று சொன்னார்கள் ஆனால், நான் போட்டி போட்டு அந்த கேரக்டரில் நடித்தேன் என்று நடிகை ரூபா கூறியுள்ளார்.