சினிமா
நம்பாதீர்கள்.. அவை அனைத்தும் போலி! – ருக்மணி வசந்த் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
நம்பாதீர்கள்.. அவை அனைத்தும் போலி! – ருக்மணி வசந்த் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சமூக வலைத்தளங்களில் பிரபலங்களைப் போல நடித்து போலி கணக்குகள் உருவாக்கப்படுவது புதிய விஷயம் அல்ல. ஆனால், தற்போது அந்த பிரச்சனைக்கு புதிய பரிமாணம் கிடைத்துள்ளது. தமிழ் மற்றும் கன்னட திரைப்பட நடிகை ருக்மணி வசந்த் தன்னைப் போல சில நபர்கள் நடித்து பலரை தொடர்பு கொள்கிறார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.அவர் வெளியிட்ட செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ருக்மணி வசந்த் தமிழ் மற்றும் கன்னட திரைப்பட உலகில் மெதுவாக தன் இடத்தை நிலைநிறுத்தி வருகிறார். இவர் தனது இயல்பான நடிப்பு மற்றும் வெளிப்பாடு காரணமாக ரசிகர்களின் மனதை கொள்ளையடித்திருந்தார். பின்னர் அவர் தமிழிலும் பல திரைப்பட வாய்ப்புகளை பெற்றார். தற்போது அவர் பங்கேற்கும் சில முக்கியமான தமிழ் படங்கள் தயாரிப்பில் உள்ளன.இவ்வளவு விரைவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ள ருக்மணி, தற்போது ஒரு போலி அடையாள மோசடியில் சிக்கியுள்ளார். ருக்மணி தனது அதிகாரபூர்வ தளங்களில், “ஒருவர் என்னைப் போல நடித்து, என் பெயரில் பலரிடம் தொடர்பு கொண்டு பேசுகிறார். தயவுசெய்து எனது பெயரைச் சொல்லி வரும் எந்த அழைப்பையும் அல்லது மெசேஜையும் நம்ப வேண்டாம். அவை அனைத்தும் போலி!” என்று குறிப்பிட்டுள்ளார். இது தற்பொழுது வைரலாகி வருகின்றது.