இலங்கை

நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் வேலைத்திட்டம்: பலர் கைது

Published

on

நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் வேலைத்திட்டம்: பலர் கைது

நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர்ச்சியான, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதன்படி, நேற்று வெள்ளிக்கிழமை (07) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்கமைய, 416 கிராம் ஹெரோயின், 583 கிராம் ஐஸ், 900 மில்லிகிராம் கொக்கெய்ன், 926 கிராம் கஞ்சா, 25,683 கஞ்சா செடிகள், 4 கிராம் குஷ்ரக போதைப்பொருள், 17 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 1,172 போதை மாத்திரைகள் மற்றும் 114 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

Advertisement

 அதேநேரம், குறித்த போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 1,087 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 மேலும், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரம், 1089 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், மறுவாழ்வு நிலையங்களுக்கு 16 பேர் அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version