பொழுதுபோக்கு
நான் இல்ல, நீங்கதான் என் கூட நடிக்கிறீங்க; சிவாஜியிடம் சொன்ன இளையராஜா; கடைசியில் வந்த சாதனை பாட்டு!
நான் இல்ல, நீங்கதான் என் கூட நடிக்கிறீங்க; சிவாஜியிடம் சொன்ன இளையராஜா; கடைசியில் வந்த சாதனை பாட்டு!
சிவாஜி முதல் இன்றைய சூரி வரை பல முன்னணி நடிகர்களுக்கு ஹிட் பாடல்கள் கொடுத்துள்ள இளையராஜா, சிவாஜியுடன் ஒரு பாடலுக்கு கம்போசிங் செய்வது போல் நடித்திருப்பார். அப்போது நடந்த சுவாரஸ்யமான அனுபவத்தை ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார் இளையராஜா. 70-களின் இறுதியில் தொடங்கி இன்றுவரை தமிழ் சினிமாவில் இசையில் ஆதிக்கம் செலுத்தி வருபவர் இளையராஜா. அன்னக்கிளி படம் தொடங்கி அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், ஓடாத கதையையும் தனது இசையால் ஒட வைப்பார் என்ற பெருமையை பெற்றுள்ளார். 80-களில் இளையராஜா இசை இருந்தாலும் போதும் படம் ஹிட்டாகிவிடும் என்ற நிலை இருந்தது. அதற்கு ஏற்றார்போல், தனது பாடல்கள் மூலமாகவே பல படங்களை ஓட வைத்த பெருமை இளையராஜாவுக்கு உண்டு.தற்போது 75 வயதை கடந்தவராக இருந்தாலும், இன்றைக்கும் இளம் இசையமைப்பாளர்களுக்கு போட்டியாக வலம் வரும் இளையாஜா, ஒரு விஷயத்தில் மட்டும் கண்டிப்புடன் இருந்து வருகிறார். அது தான் பாடல் காப்புரிமை விவகாரம். தனது பாடல்களை சினிமாவில் மற்றவர்கள் பயன்படுத்த இளையராஜா அனுமதிப்பதில்லை. தனது அனுமதி இல்லால் தனது பாடல்கள் மற்றும் இசையை, படங்களில் பயன்படுத்தினால் அதற்கு காப்புரிமை கேட்டு வழக்கு தொடர்ந்துவிடுவார். இதன் காரணமாக தன்னை பற்றி பாசிட்டீவ் நெகடீவ் என பலதரப்பட்ட கருத்துக்கள் வந்தாலும்,அதை பற்றி எந்த ரியாக்ஷனும கொடுக்காத இளையராஜா இசையில் கவனம் செலுத்தி வருகிறார். இன்றைக்கும அவரது பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது. சிவாஜி தொடங்கி இன்றைய நடிகர் சூரி வரை பல நடிகர்களுக்கு ஹிட் கொடுத்துள்ள இளையராஜா சாதனை என்ற படத்தில் சிவாஜியுடன் ஒரு காட்சியில் இணைந்து நடித்திருப்பார். இந்த காட்சியில் நடிக்கும்போது உன் கூட நான் நடிக்கிறேனா, என்கூட நீ நடிக்கிறியா என்று கேட்டார். இதை கேட்ட நான் என்ன அண்ணே இப்படி கேட்குறீங்க, என் கூடத்தானே நீங்க நடிக்கிறீங்க, படத்தில் நான் வேறொரு கேரக்டராக மாறவில்லை. இளையராஜாவாகத்தான் இருக்கிறேன். அதனால் என் கூடத்தான் நீங்க நடிக்கிறீங்க, என்று சொன்னேன். அதை கேட்ட அவர் கேமரா ஆன் ஆகட்டு பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னார். அதன்பிறகு பாடல் கம்போசிங் நடந்தது என்று கூறியுள்ளார். இந்த படத்தில் டைரக்டர் ராம்குமார் என்ற கேரகடரில் சிவாஜியும் பாபு என்ற நடிகர் கேரகட்டரில் பிரபுவும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.