இலங்கை
நீர்கொழும்பின் சில பகுதிகளில் 12 மணித்தியால நீர்வெட்டு!
நீர்கொழும்பின் சில பகுதிகளில் 12 மணித்தியால நீர்வெட்டு!
நீர்கொழும்பின் சில பகுதிகளில் இன்று 12 மணித்தியால நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று முற்பகல் 09 மணி முதல் இரவு 09 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என அந்தச் சபை தெரிவித்துள்ளது. பெரியமுல்ல, ஏத்துக்கால, குடாப்பாடுவ, தளுபொத்த, கட்டுவ, லெவிஸ் வீதி, செல்லக்கந்த வீதி மற்றும் கரையோர வீதி ஆகிய பகுதிகளில் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
நீர்கொழும்பு நீர் வழங்கல் திட்டத்தின் பெரியமுல்ல நீர்த்தாங்கியில் முன்னெடுக்கப்படவுள்ள அவசர சுத்திகரிப்பு பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.