இலங்கை

பேராதனைப் பல்கலையில் மகளிர் விடுதியின் அருகே மனித கருவின் பாகங்கள் ; அதிர்ச்சியில் பொலிஸார்

Published

on

பேராதனைப் பல்கலையில் மகளிர் விடுதியின் அருகே மனித கருவின் பாகங்கள் ; அதிர்ச்சியில் பொலிஸார்

பேராதனைப் பல்கலைக்கழகத்தின்  மகளிர் விடுதியின் அருகே மனித கருவின் உடற்கூறு பகுதிகள் புதைக்கப்பட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

விஜயவர்தன மண்டபத்தின் துணைவேந்தர் மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று (07)  அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மருத்துவ பீடம், அறிவியல் பீடம் மற்றும் கால்நடை மருத்துவ பீடத்தின் இறுதி ஆண்டு மாணவர்கள் உட்பட சுமார் 2,000 மாணவர்கள் இந்த விடுதியில் உள்ளனர்.

கருவின் உடற்கூறு போன்ற பாகங்களைக் கண்டறிந்த பின்னர், பல்கலைக்கழக துணைவேந்தர் அந்த பாகங்களை புதைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

பின்னர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் நிலைய குற்றப்பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version