இலங்கை

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட கணவன், மனைவி கைது!

Published

on

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட கணவன், மனைவி கைது!

நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில்  ஈடுபட்டு வந்த கணவன், மனைவியை திவுலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

 திவுலப்பிட்டிய, மரதகஹமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான ஆணிடம்  11 கிராம் மற்றும் 980 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், பெண்ணிடம் 5,100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Advertisement

விசாரணைகளில், இவர்கள் இருவரும் நீண்ட காலமாக திவுலப்பிட்டிய, கட்டுவெல்லேகம, துனகஹ, அலுதேபொல, மரதகஹமுல்ல, நெல்லிகஹமுல்ல, நில்பனாகொட, மினுவாங்கொட ஆகிய பிரதேசங்களுக்குப் போதைப்பொருட்களை விற்பனை செய்து  வந்துள்ளமை தெரியவந்துள்ளது. 

கைது செய்யப்பட்ட ஆண் இன்று 08ஆம் திகதி மினுவாங்கொட நீதிமன்றில்  முற்படுத்தப்பட்ட பின்னர், தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான உத்தரவின் பேரில் விசாரிக்கப்படவுள்ளார். குறித்த பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version