பொழுதுபோக்கு
மரியாதை ஒரு வழிப்பாதை அல்ல… இளம் நடிகைகள் கற்றுக் கொள்ளுங்கள்; கெளரிக்காக திரண்ட திரைத்துறை
மரியாதை ஒரு வழிப்பாதை அல்ல… இளம் நடிகைகள் கற்றுக் கொள்ளுங்கள்; கெளரிக்காக திரண்ட திரைத்துறை
தமிழ்த் திரையுலகில் ‘96’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் கௌரி கிஷன். தொடர்ந்து, ‘மாஸ்டர்’, ‘கர்ணன்’ எனத் தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் கதாநாயகி மற்றும் துணை நடிகையாக நடித்து வருகிறார். தற்போது இவர் அபின் ஹரிஹரன் இயக்கத்தில் கிராண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அதர்ஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக ஆதித்யா மாதவன், அஞ்சு குரியன் மற்றும் முனிஸ்காந்த், ஹரிஷ் பெராடி, நண்டு ஜெகன் மாலா, பார்வதி, வினோத் சாகர் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.சமீபத்தில் ‘அதர்ஸ்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது பத்திரிகையாளர் ஒருவர் கதாநாயகனிடம் படத்தில் கெளரி கிஷனை தூக்கிக் கொண்டு சுற்றுகிறீர்களே அவர் வெயிட்டாக இல்லையா என்று எடை குறித்த கேள்வியை எழுப்பினார். இதனால் கடுப்பான நடிகை கெளரி கிஷன், ஒரு கதாநாயகனிடம் இப்படி கேள்வி கேட்பீர்களா? ஏன் கதாநாயகியிடம் மட்டும் கேட்குறீங்க? இது முழுக்க முழுக்க பாடி ஷேமிங்.இந்தப் படத்துக்கும் அந்தக் கேள்விக்கும் என்ன தொடர்பு? என்னோட வெயிட் பற்றி தனிப்பட்ட கேள்விகளைக் கேட்பது தப்பு. நான் 20 கிலோ இருப்பேன், 80 கிலோகூட இருப்பேன், அதைப் பற்றி நீங்க எப்படி கேட்கலாம் என்று வாதிட்டார். இந்த பிரச்சனை திரைத்துறையில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகை கெளரி கிஷனுக்கு ஆதரவாக பலரும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். Gowri did an amazing job. The moment you call out a disrespectful and an unnecessary question – a whole lot of shouting down happens. So proud that someone so young stood her ground and pushed back.No male actor gets asked what his weight is. No idea why they asked a female… pic.twitter.com/BtKO6U7lpQசின்மயிஒரு மரியாதைக் குறைவான, தேவையற்ற கேள்வியை நீங்கள் சுட்டிக்காட்டும்போது, அங்கே உடனடியாகக் கூச்சலிட்டு அடக்க முயற்சி செய்கிறார்கள். இவ்வளவு இளம் வயதில் அவர் தன் நிலைப்பாட்டில் உறுதியாக நின்று எதிர்த்துப் பேசியதை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். எந்தவொரு ஆண் நடிகரிடமும் அவரது எடை என்னவென்று கேட்கப்படுவதில்லை. ஒரு பெண் நடிகையிடம் மட்டும் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்டார்கள் என்று தெரியவில்லை என்று பதிவிட்டுள்ளார்.Inside and out, you’re beautiful and inspiring, Gouri :)Always stay the same 💪🏼@Gourayy ♥️கவின் நீங்கள் ஊக்கமளிப்பவராக இருக்கிறீர்கள். எப்போதும் இப்படியே இருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.குஷ்புபத்திரிகை துறை அதன் தரத்தை இழந்துவிட்டது. ஒரு பெண்ணின் எடை குறித்து கேட்பது இவர்களின் வேலை இல்லை. இதே பத்திரிகையாளர்கள் கதாநாயகனிடம் எடை குறித்து கேள்வி கேட்பார்களா? தன் நிலைப்பாட்டில் உறுதியாக நின்று பதிலடி கொடுத்த இளம் நடிகை கௌரி கிஷனுக்கு என் பாராட்டுக்கள். இதே நபர்களிடன் பெண்கள், நடிகைகள் திரும்பி அவர்களின் குடும்பத்துப் பெண்களின் எடையைப் பற்றிக் கேட்டால் சம்மதிப்பார்களா? மரியாதை என்பது ஒருவழிப் பாதை அல்ல. நீங்கள் மதிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்த்தால், மரியாதை கொடுக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.Journalism has lost its ground. The so called journos take journalism to the gutters. How much a woman weighs is none of their business. And asking the hero about it?? What a shame! Kudos to the young #GowriShankar who stood her ground and gave it back. Are the same men ok if…ராதிகா சரத்குமார்தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த நடிகை கெளரி கிஷனுக்கு பாராட்டுகள். ‘அதர்ஸ்’ படத்தின் இயக்குநர், கதாநாயகன், தயாரிப்பாளர்கள் அவருக்கு ஆதரவாக இல்லாதது வேதனையளிக்கிறது. இதுபோன்ற பத்திரிகையாளர்களை பிரஸ் கிளப் தடை செய்ய வேண்டும். எல்லா இளம் நடிகைகளும் கெளரியை போன்று நிமிர்ந்து நிற்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.