இலங்கை

யாழில் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த இளைஞர்களுக்கு பொலிஸார் கொடுத்த ஷாக்

Published

on

யாழில் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த இளைஞர்களுக்கு பொலிஸார் கொடுத்த ஷாக்

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த மூன்று இளைஞர்களை, போதைப்பொருளை நுகர்வதற்காக பயன்படுத்திய மருத்துவ ஊசி, லைட்டர் , மேசைக்கரண்டி ஹெரோயின் உள்ளிட்ட பொருட்களுடன் பொலிஸார் நேற்று (07) கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாண நகர் பகுதியை அண்டிய பகுதியில் இளைஞர்கள் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அவ்விடத்தை சுற்றி வளைத்து , போதைப்பொருளை நுகர்ந்துக்கொண்டிருந்த மூன்று இளைஞர்களையும் கைது செய்தனர்.

Advertisement

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருள் , மருத்துவ ஊசி, லைட்டர் , மேசைக்கரண்டி உள்ளிட்டவற்றையும் மீட்டுள்ளனர்.

 அதனை அடுத்து கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸார் , நல்லூர் மற்றும் அரியாலை ஆகிய பகுதிகளை சேர்ந்த 32 வயதான இருவரும் , 30 வயதான ஒருவரையுமே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version