பொழுதுபோக்கு
ரஜினி படத்திற்கு 40 நாள் கால்ஷீட், வசனமே இல்ல; மீண்டும் கேட்டப்போ என்ட கால்ஷீட்டே இல்ல: எஸ்.வி.சேகர் ஓபன் டாக்
ரஜினி படத்திற்கு 40 நாள் கால்ஷீட், வசனமே இல்ல; மீண்டும் கேட்டப்போ என்ட கால்ஷீட்டே இல்ல: எஸ்.வி.சேகர் ஓபன் டாக்
ரஜினிகாந்த் படத்தில் நடிக்க 40 நாட்கள் காலஷீட்டில் 40000 சம்பளம் வாங்கினேன். ஆனால் மீண்டும் அந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு கால்ஷீட் கொடுக்கும்போது ஒரு நாள் கால்ஷீட்க்கு ரூ40000 வாங்கினேன் என்று நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1979-ம் ஆண்டு வெளியான நினைத்தாலே இனிக்கும் என்ற படத்தின் மூலம சினிமாவில் அறிமுகமானவர் எஸ்.வி.சேகர். தொடர்ந்து வறுமையின் நிறம் சிவப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்த இவர், 1986-ம் ஆண்டு, ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான மிஸ்டர் பரத் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் சத்யராஜூவின் மகனாக நடித்திருந்த இவருக்கு, அதிகமான வசனங்களே கிடையாது. அதே சமயம், இவரது கேரக்டர் கடைசியில் ரஜினிகாந்துடன் இணைந்து, சத்யராஜூவை திருத்தும் வகையில் கதை அமைக்கப்பட்டிருக்கும். இந்த படத்தில் நடிக்க எஸ்.வி.சேகர் 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார். மேலும், இந்த படம் இந்தியில் வெளியான திரிஷூல் என்ற படத்தின் ரீமேக். ஆனால் இந்தி படம் சேகர் கபூர் நடித்த கேரக்டரில் நடிக்க போகிறோம் என்று நினைக்காதே, ரஜினிகாந்த் சத்யராஜ் போக மீதி, கவுண்டமணி ஆகியோர் நடித்தது போகத்தான் உனக்கு கிடைக்கும். ஆனால கதை நம்மை சுற்றி தான் நகரும் என்ற விசு கூறியுள்ளார். அதன்படி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட எஸ்.வி.சேகருக்கு டைலாக் இல்லை. தப்பித்தவறி எதாவது டைலாக் வந்துவிட்டால் இந்த டைலாக் நீங்க பேசனுமா என்று ரஜினிகாந்த் கேட்பார். டைலாக்கே வரல இது மட்டும் தான் இருக்கு, நீங்க சொன்ன பேசுறேன் இல்லனா வேண்டாம் என்று சொன்னேன். அப்படி இருந்தபோது என் கால்ஷீட் முடிந்து பேட்ச் வொர்க் கால்ஷீட் கேட்டார்கள். நான் நாடகத்தில் பிஸியாக இருந்ததால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. அப்போது ஏவிஎம்.மில் இருந்து ஒருவர் அழைத்து நீங்கள் அவ்ளோ பிஸியா, 1999-ல் தான் கால்ஷீட் கொடுப்பீங்களா என்று கேட்டார்.சொல்ல முடியாது சார், ஆண்டவன் அருள் இருந்தால் 2000 -2001-ல் கூட கால்ஷீட் கொடுப்பேன் என்று சொன்னேன். சொன்னபடி 2001-ல் கால்ஷீட் கொடுத்தேன். 1986-லுல் வெளியான மிஸ்டர் பாரத் படத்திற்கு 40 நாளுக்கு 40 ஆயிரம சம்பளம், ஆனால 2001-ல் ஏ.வி.எம்.சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு 40 ஆயிரம் சம்பளம வாங்கினேன் என்று எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.