இலங்கை
வலையில் பிடிபட்ட ஒருதொகை மீன்கள்.!
வலையில் பிடிபட்ட ஒருதொகை மீன்கள்.!
புத்தளம்- உடப்பு, சின்ன கொலனி கடற்பரப்பில் இன்று காலை கரைவலையில் ஒருதொகை மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன.
உடப்பு என்பது புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய ஊர் ஆகும். இங்கு மீன்பிடி நடவடிக்கைகள் பரவலாக நடைபெற்று வருகின்றன.
இதன்போது, கரைவலைக்குச் சொந்தமான ஒருவரின் வலையில் சீலா, நெத்தலிமீன், கும்பலா, பூச்சக்கனி மற்றும் பன்னா, காரல், ராக்கை மீன்உள்ளிட்ட பல வகை மீன்கள் கூடுதலாகப் பிடிக்கப்பட்டன. இதனால் மீனவர்கள் பெரிதும் சந்தோசமடைந்து, பல கூடைகளில் மீன்களை அள்ளிச் சென்றுள்ளனர்.