பொழுதுபோக்கு
14- வயதில் அறிமுகம், 16- ல் கர்ப்பம்; 15- வயது மூத்த நடிகருடன் காதல் திருமணம்: இவரது மகள் பிரஷாந்துக்கு ஜோடி!
14- வயதில் அறிமுகம், 16- ல் கர்ப்பம்; 15- வயது மூத்த நடிகருடன் காதல் திருமணம்: இவரது மகள் பிரஷாந்துக்கு ஜோடி!
சினிமாவில் திடீர் திருப்பங்கள் ஏற்படுவது போல அதில் நடிக்கும் நடிகர்களின் வாழ்க்கையிலும் அவ்வப்போது திருப்பங்கள் ஏற்படுகின்றன. அப்படி திரைத்துறையில் 14 வயதில் அறிமுகமாகி 15 வயதில் மூத்த நடிகரை திருமணம் செய்து கொண்ட நடிகை குறித்து பார்க்கலாம். அந்த நடிகை வேறு யாரும் இல்லை நடிகை டிம்பிள் கபாடியா தான்.கடந்த 1957-ஆம் ஆண்டு மும்பையில் செல்வ செழிப்பு மிக்க குஜராத்தி குடும்பத்தில் பிறந்தவர் நடிகை டிம்பிள் கபாடியா. பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும், இயக்குநருமான ராஜ்கபூர் கடந்த 1971-ஆம் ஆண்டு டிம்பிள் கபாடியாவை தனது படமான ‘பாபி’ என்ற இந்தி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் செய்தார். முதல் படத்தில் நடிக்கும்போது டிம்பிள் கபாடியாவுக்கு 14 வயது தான். இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன் டிம்பிள் கபாடியாவின் நடிப்பு பாராட்டப்பட்டது. அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் அவரை தேடி வந்தன. இதற்கிடையே பாலிவுட் சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னா டிம்பிள் கபாடியா மீது காதல் வயப்பட்டார். இவருவருக்கும் இடையில் காதல் மலர்ந்த நிலையில் டிம்பிள் கபாடியா தனது 15 வயதில் நடிகர் ராஜேஷ் கன்னாவை திருமணம் செய்து கொண்டார். இதில் என்ன ஒரு விஷயம் என்றால் நடிகர் ராஜேஷ் கன்னாவிற்கு அப்போது வயது 30. 15 வருட இடைவெளியில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.திருமணமான அடுத்த ஆண்டே அதாவது தனது 16 வயதிலேயே டிம்பிள் கபாடியா கர்ப்பமானார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்க ராஜேஷ் கன்னா தடை விதித்ததால் டிம்பிள் கபாடியா 10 ஆண்டுகள் திரைத்துறையில் இருந்து விலகி இருந்தார். ராஜேஷ் கன்னா – டிம்பிள் கபாடியா தம்பதிக்கு ட்விங்கிள் கன்னா என்ற பெண் குழந்தை பிறந்தது. இதற்கிடையே டிம்பிள் – ராஜேஷ் தம்பதி இடையே அடிக்கடி பிரச்சனைகள் வெடித்ததால் இருவரும் கடந்த 1982-ஆம் ஆண்டு அதாவது திருமணமான 9 ஆண்டுகளில் விவாகரத்து பெற்றனர்.இதையடுத்து மீண்டும் சினிமாத் துறையில் காலெடுத்து வைத்த டிம்பிள் கபாடியா, பாலிவுட் நடிகர்கள் அனில் கபூர், சன்னி தியோல், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலருடன் இணைந்து நடித்து வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். அத்துடன் கமல்ஹாசனுடனும் இணைந்து நடித்துள்ளார். இவர் கடந்த 2020-ஆம் ஆண்டில் கிறிஸ்டோபர் நோலனின் ‘டெனெட்’ திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார். இவரது நடிப்பு சர்வதேச பார்வையாளர்களையும் கவர்ந்தது. டிம்பிள் கபாடியா மகள் ட்விங்கிள் கன்னா தற்போது பிரபல பாலிவுட் நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழில் பிரசாந்த் நடிப்பில் வெளியான ’ஜோடி’ திரைப்படத்தில் நடித்ததாக கூறப்படுகிறது.