சினிமா
பிக் பாஸில் வெளியேறிய பிரியங்கா முதலில் சந்தித்தது யாரை தெரியுமா?
பிக் பாஸில் வெளியேறிய பிரியங்கா முதலில் சந்தித்தது யாரை தெரியுமா?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, மக்கள் மத்தியில் பிரபலமானவர் விஜே பிரியங்கா. இவர் டைமிங் காமெடிகளால் சிறப்பான முறையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க கூடிய வல்லமை கொண்டவர். இவருக்கு என்று பல ரசிகர்கள் காணப்படுகின்றார்கள். தொகுப்பாளராக இருந்த பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் எப்படியும் டைட்டில் வெல்லுவார் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் பாதியில் வெளியேறினார். அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது இயல்போடு விளையாடியதை ரசிகர்கள் கொண்டாடினர். இதைத்தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் கலந்து கொண்டார் பிரியங்கா. அந்த சீசனை மணிமேகலை தொகுத்து வழங்கினார். இதன் போது இரண்டு பேருக்கும் இடையே மனஸ்தாபங்கள் உருவானது. இந்த விவகாரத்தால் மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து வெளியேறினார். ஆனால் பிரியங்கா டைட்டில் வென்றார். அதேபோல முதலில் திருமணம் செய்து விவாகரத்து ஆன பிரியங்கா இரண்டாவதாக வசி என்பவரை திருமணம் செய்தார். இரண்டு பேருக்குமே வயது வித்தியாசம் அதிகம். இதனால் பல விமர்சனங்களும் எழுந்தன. ஆனால் அவை அத்தனைக்கும் சமீபத்தில் பதிலடியும் கொடுத்திருந்தார். இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் விருந்தினராக கலந்து கொண்ட பிரியங்கா தேஷ்பாண்டே, வெளியே வந்ததும் தனது நெருங்கிய தோழிகளை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அதில் பவானியின் பிறந்த நாளை வாழ்த்தி பதிவிட்டும் உள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.