சினிமா
அட்ராசக்க.! சம்பளத்திற்கு கட்டுப்பாடு விதித்த தயாரிப்பாளர் சங்கம்.. வெளியான முடிவு இதோ
அட்ராசக்க.! சம்பளத்திற்கு கட்டுப்பாடு விதித்த தயாரிப்பாளர் சங்கம்.. வெளியான முடிவு இதோ
தமிழ் திரைத்துறை எப்போதுமே இந்திய சினிமாவின் மிகப் பெரிய பொருளாதார மையங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, சிம்பு, விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்கள் இன்று தமிழ் சினிமாவின் அடையாளங்களாகக் கருதப்படுகிறார்கள்.அவர்களின் ரசிகர் வட்டமும், திரைப்படங்கள் மூலம் பெறும் வருமானமும் உலகளவில் பரவலாக பேசப்படும் விஷயங்களாகும்.இந்நிலையில், அவர்களுக்கு வழங்கப்படும் மிகப் பெரிய அளவிலான சம்பளங்கள் குறித்து பல ஆண்டுகளாகவே திரைத்துறையில் விவாதம் இருந்து வந்தது. சில முன்னணி நடிகர்கள் ஒரு படத்துக்கே 150 கோடி முதல் 200 கோடி ரூபாய் வரையிலான சம்பளத்தை வாங்குவதாகக் கூறப்படுகிறது.இதனால், தயாரிப்பாளர்கள் மீது மிகப் பெரிய பொருளாதார அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக பலரும் விமர்சித்துள்ளனர்.இந்த பின்னணியில், இன்று நடைபெற்ற திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மிகுந்த கவனத்தை ஈர்த்தது. இந்த கூட்டத்தில் மொத்தம் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் இரண்டு தீர்மானங்கள், தமிழ் சினிமாவின் எதிர்காலத்திற்கு மிக முக்கியமானவை எனக் கூறப்படுகிறது.முதலாவது தீர்மானம், நடிகர்கள் தங்களது திரைப்பட கால்ஷீட்டை வெப் சீரிஸ் அல்லது பிற OTT தளங்களுக்கு வழங்கக் கூடாது என்பது தான். அடுத்த முக்கிய தீர்மானமாக முன்னணி நடிகர்களின் சம்பளத்தை கட்டுப்படுத்துவது பற்றியது விளங்குகிறது. அதாவது, ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா, சிம்பு, விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இனி ஒரே சம்பளத்தைப் பெறக் கூடாது.அதற்கு பதிலாக, படம் வணிகரீதியாக எவ்வளவு வெற்றி பெறுகிறது என்பதைப் பொறுத்தே அவர்களுக்கு பங்கு (Profit Sharing Basis) அளிக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இதனால், திரைப்படத்தின் வியாபாரம் நல்லதாக இருந்தால் நடிகர்களும் அதிலிருந்து பங்கெடுப்பார்கள்; ஆனால் படம் தோல்வியடைந்தால் தயாரிப்பாளர்கள் மிகப் பெரிய இழப்பைச் சந்திக்க வேண்டிய நிலை தவிர்க்கப்படும். இவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.எதிர்காலத்தில், இந்த முடிவுகள் நடைமுறைப்படுத்தப்பட்டால், தமிழ் திரைத்துறை வணிக ரீதியாக மாறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.