இலங்கை

அதிரடி கைதான அரசாங்க உத்தியோகத்தர் ; கையொப்பத்தால் வந்த சிக்கல்

Published

on

அதிரடி கைதான அரசாங்க உத்தியோகத்தர் ; கையொப்பத்தால் வந்த சிக்கல்

மொனராகலை,படல்கும்புரை பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு சொந்தமான காணி ஒன்றில் உள்ள மரங்களை வெட்டுவதற்காக குறித்த பெண்ணின் கையொப்பத்தை போலியாக இட்ட ஆவணத்தை உறுதிபடுத்திய குற்றச்சாட்டில் கிராம அலுவலர் ஒருவர் நேற்று (08) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

முறைப்பாட்டாளரான பெண் 2017 ஆம் ஆண்டில் குறித்த பிரதேசத்தில் இல்லாதபோது, ​​மரக்கடத்தல்காரர் மரங்களை வெட்ட அனுமதி பெறுவதற்காக வழங்கிய கடிதத்தில் உள்ள போலி கையொப்பத்தை கிராம அலுவலர் உறுதிபடுத்தி சான்றளித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Advertisement

முறைப்பாட்டாளரான பெண் ஏற்கனவே இது தொடர்பாக படல்கும்புரை பிரதேசச் செயலாளர் மற்றும் படல்கும்புர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த போதும் அரசியல் அழுத்தம் காரணமாக எந்தவித விசாரணையும் நடத்தப்படவில்லை என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தற்போதைய பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த கிராம அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version